Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Widow Certificate Online: ஆன்லைனில் விதவைச் சான்றிதழ் பெறுவது எப்படி..? முழு விவரங்களும் இங்கே….

Gowthami Subramani July 22, 2022 & 12:05 [IST]
How to Apply Widow Certificate Online: ஆன்லைனில் விதவைச் சான்றிதழ் பெறுவது எப்படி..? முழு விவரங்களும் இங்கே….Representative Image.

How to Apply Widow Certificate Online: விதவைச் சான்றிதழ் பெறுவதற்கு பின்பற்றப்படும் வழிமுறைகளையும், சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களையும் இந்தப் பிரிவில் காணலாம்.

கணவரை இழந்த ஆதரவற்ற ஒரு பெண், விதவைச் சான்றிதழ் பெறுவது முக்கியமாகிறது. ஆனால், விதவைச் சான்றிதழை எப்படி பெறுவது எனத் தெரியாமல் இருப்பர். ஆன்லைனில், எளிமையான முறையிலே விதவைச் சான்றிதழைப் பெற முடியும். விதவைச் சான்றிதழைப் பெறுவதற்கு, அவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதுடன், கீழே குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் வைத்திருப்பது அவசியம் ஆகும். தமிழகத்தில் விதவை சான்றிதழை இ-சேவை இணையதளத்தின் மூலம் பெறலாம்.

இந்த சான்றிதழின் உதவி கொண்டு அரசின் பல்வேறு திட்டங்களில் இணைந்து பயன் பெறலாம்.

விதவைச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரரின் ரேஷன் கார்டு அல்லது வேறு சில அடையாள அட்டை
  • கணவர் இறந்த சான்றிதழ்
  • திருமண சான்றிதழ் அல்லது திருமணம் நடந்ததற்கான வேறு சில ஆவணங்கள்
  • புகைப்படம் -1

விதவைச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறை

  • முதலில், தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், Login செய்வதற்குத் தேவையானவற்றை Enter செய்ய வேண்டும்.
  • பின், Captcha Code-ஐ பதிவிட வேண்டும்.
  • அதன் பிறகு, Login என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • Login செய்த பிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கும். அந்த பக்கத்தில், Services என்பதைத் தேடி க்ளிக் செய்யவும்.
  • Services பக்கத்தில், Department Wise-க்கு கீழ் Revenue Department என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • Revenue Department-ன் கீழ் REV-109 Widow Certificate என்ப்தைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • அதனைக் க்ளிக் செய்த பின்னர், ஒரு புதிய பக்கம் உருவாகும். அந்த பக்கத்தில் Service Description, Supporting Documents, Application Fee, மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை அடங்கும்.
  • விதவைச் சான்றிதழ் விண்ணப்பிக்கத் தேவையான கட்டணம் ரூ.50 எனக் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • பின், அதே பக்கத்தில் Proceed என்று இருக்கும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் Proceed என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அந்த பக்கத்தில் CAN (Citizen Access Number) Number, மற்றும் இதர சில விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.
  • (CAN Number-ஐ பதிவிட்ட உடன், அந்த பக்கத்தின் கீழே உள்ள விண்ணப்பதாரரின் Record-ஐக் க்ளிக் தேர்ந்தெடுக்க Option Button-ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.)
  • அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்தபிறகு, Proceed என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • பின், ஒரு புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் விதவைச் சான்றிதழ் விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • அதன் பிறகு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, Acknowledgement Receipt-ஐ அச்சிட வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் அதன் ஸ்டேட்டஸ்-ஐத் தெரிந்து கொள்ள Check Status என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின், அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பதிவிட்டு விண்ணப்பம் Approved ஆன உடன் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, எளிதான முறையில் விதவைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம்.


விதவை உதவித் தொகை எப்படி பெறுவது? முழுத் தகவல்கள் இங்கே…!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Apply Widow Certificate in Tamilnadu Online | How to Apply Widow Certificate Online | How to Apply for Widow Certificate in Tamilnadu | How to Apply Destitute Widow Certificate in Tamilnadu | How to Apply Widow Certificate in Tamilnadu | How to Download Widow Certificate in Tamilnadu | How to Apply Widow Certificate | Widow Certificate Apply Online | Widow Certificate Download | Widow Certificate application form in Tamil | How to Download Widow Certificate in Tamilnadu | Widow Certificate Apply Online in Tamilnadu | Destitute Widow Certificate eligibility in Tamilnadu | Destitute Widow Certificate Rules in Tamil | Widow Certificate Document


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்