Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? முழு விவரங்களும் இங்கே….

Gowthami Subramani July 31, 2022 & 12:25 [IST]
வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? முழு விவரங்களும் இங்கே….Representative Image.

2020-21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் படி, இன்று ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், வருமான வரித்தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்ட நிலையில், கால வரம்பு நீட்டிக்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

மீறினால் அபராதம்

அதன் படி வருமான வரித்துறை, குறிப்பிடப்பட்ட தேதிக்குள் செலுத்தத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சில காரணங்களினால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வரி தாக்கல் செய்ய முடியாததினால் சிக்கல்கள் வரக்கூடும். மாதந்தோறும் 1% வரையிலான கூடுதல் வட்டியை வரியுடன் செலுத்த வேண்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்ட அவகாசத்திற்குள் வருமான வரித் தாக்கல் செய்ய முடியாதவர்கள் கீழ்க்கண்ட முறையின் படி அபராதத் தொகை செலுத்த வேண்டும்.

ஆண்டு வருமானம்

அபராதத் தொகை

ரூ.2.5 லட்சம் வரை உள்ளவர்கள்

இல்லை

ரூ.250001 முதல் ரூ.500000 வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள்

ரூ.1000

ரூ. 500001 முதல் ரூ.1000000

ரூ.5000

 

இது போல ஆண்டு வருமானத்திற்கேற்ப அபராதத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரியை செலுத்தி விட வேண்டும். அபராதத் தொகை தவிர்த்து குறிப்பிட்ட காலத்திற்கு செலுத்தி விடுவது நல்லது.

ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள்

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம்.

விண்ணப்பிக்கும் நபர்கள் வருமான வரித் துறையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: https://incometaxindia.gov.in/

அந்த இணையதளத்தில் பான் எண்ணை வைத்து Login செய்ய வேண்டும்.

அதன் படி, 2021-22-ன் கீழ் “Download” என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், ITR-1 (Sahaj) என்ற படிவத்தினைக் க்ளிக் செய்ய வேண்டும். பின், படிவம் Excel வடிவில் டவுன்லோடு செய்யப்படும்.

பிறகு, படிவத்தைத் திறந்து, Form-16 படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

விவரங்கள் அனைத்தையும் பதிவிட்டு, Excel படிவத்தை “Save” செய்ய வேண்டும்.

அதன் பின் இணையதளத்தில் “Submit Return” என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்து Excel Sheet-ஐ பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறகு, டிஜிட்டல் கையொப்பம் இட வேண்டும்.

பிறகு, வருமான வரித் தாக்கல் முழுமையாக நிறைவேறி விட்டதாக செய்தி வரும்.

கடைசியாக, வருமான வரித் தாக்கல் செய்ததற்கான Acknowledgement பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

இதன் மூலம், வருமான வரித் தாக்கல் செய்யப்பட்டதை “Confirm” செய்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to File Income Tax Return Online for First Time | Where to File Income Tax Return Online | Can I File Income Tax Return Online | How to File Income Tax Return Online Without Software | How to File the Tax Return Online | How do I File my 0 tax return online | How do you submit your tax return online | How to File income tax return online step by step | Penalty for Late Filing of Income Tax Return for ay 2022 23 | Income tax Penalty Chart | Penalty for Late Payment of Income Tax India | Income less than 2 5 lakhs it returns penalty | Income tax return filing fees by ca | ITR Filing


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்