Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின்சாரத்தை இப்படி சேமியுங்க… மின்சாரக் கட்டணத்தையும் சேமிக்கலாம்…!

Gowthami Subramani September 10, 2022 & 15:40 [IST]
மின்சாரத்தை இப்படி சேமியுங்க… மின்சாரக் கட்டணத்தையும் சேமிக்கலாம்…! Representative Image.

மின்சார கட்டணங்கள் அதிகரித்து வரும் வேளையில், மின்சாரத் தேவைகளைப் புரிந்து கொள்வது அவசியம். மேலும், மின்சாரத்தினைச் சிக்கனம் செய்து, மின்சாரத்திற்கு அதிக கட்டணங்களைக் கட்டுவதிலிருந்து எப்படி மீளலாம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மின்சார தேவைகள்

நடைமுறையில் தொழில்நுட்பங்கள் வளர வளர, மின்சாரத்திற்கான தேவைகளும் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், லேப்டாப், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் ஆகியவை வேலை செய்ய மின்சாரம் அவசியமாகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட சாதனங்கள் அதிக அளவிலான மின்சாரத்தை வைத்து எரிக்கின்றன. மேலும், மின்சாதனப் பொருள்களை பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் இயங்குகின்றன. இவற்றைப் பற்றி அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எதிர்கால சந்ததியினர்

நம் வாழ்வில் நாம், இப்போது சேமிக்கக் கூடிய சிறு சிறு விஷயங்கள், நம் எதிர்கால சந்ததியினர்களுக்கு உதவக் கூடியதாக அமையும். அவ்வளவு ஏன், நாம் வாழும் காலத்திலேயே நமக்கு அவை பயன்படுபவையாக அமையலாம். வாழ்க்கைக்குப் பணம், நகை உள்ளிட்டவை எவ்வளவு அவசியமோ, அதே போல நீர், மின்சாரம் உள்ளிட்டவையும் அவசியம் ஆகும்.

தேவைக்கேற்ப பயன்படுத்துதல்

நீர், மின்சாரம் போன்ற எதுவாக இருந்தாலும் நாம் தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஆள் இல்லாத இடங்களில் மின் சாதனப் பயன்பாட்டு பொருள்களை இயக்குதல், தேவைக்கு அதிகமாக நீரை வீண் செய்தல் உள்ளிட்டவை விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தப் பதிவில் மின்சார சேமிப்பிற்கான சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி காண்போம்.

மின்சார சேமிப்பின் நடவடிக்கைகள்

வீட்டில் மின்சாரத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்த சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • மின்சாரத்தைச் சேமிக்க எடுக்கும் முதல் நடவடிக்கையாக, வீட்டில் ஆளில்லா அறைகளிலும், ஃபேன், லைட் போன்றவற்றை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு இடத்தை விட்டுச் செல்லும் போது, அந்த இடத்தில் ஃபேன், லைட் போன்றவை இருப்பின், அவற்றை ஆஃப் செய்து விட வேண்டும்.
  • அடுத்த படியாக, நாம் உபயோகப்படுத்தும் ஒரு சில பல்புகள் அதிகமான மின்சாரத் தேவைக்கு உட்பட்டவையாக இருக்கலாம். இவ்வாறு அதிக மின்சாரத் தேவை பல்புகளை உபயோகிப்பதை விட, LED, CFL உள்ளிட்ட மின் விளக்குகளை உபயோகிக்கலாம். இதன் மூலம், 2 முதல் 25% வரையிலான மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும்.
  • தேவைக்கு ஏற்றவாறு வெப்பநிலையை சீராக வைக்க தெர்மோஸ்டேட் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலமும், மின்சாரம் அதிகளவு பயன்படுத்துதலைத் தவிர்க்கலாம்.
  • மேலும், “ENERGY STAR” சான்றளிக்கப்பட்ட மின் சாதனப் பொருள்கள், மின்சாரம் அதிகம் பயன்படுத்துவதைக் குறைக்கும். அதன் படி, “ENERGY START” சான்றளிக்கப்பட்ட வாஷிங் மெஷின்கள் வாங்கும் போது வழக்கமாக நாம் பயன்படுத்துவதை விட 25% குறைவான ஆற்றல் மற்றும் 45% குறைவான நீரையே பயன்படுத்துகின்றன. அதே போல, இந்த சான்றளிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்கள் 90% அளவிற்கும் குறைவான ஆற்றலைப் பயன்படுத்துபவையாக உள்ளன.
  • வீடுகளில் மின் தேவைக்கு சோலார் சிஸ்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வீடுகள் காற்றோட்ட மற்றும் வெளிச்சம் இரண்டிற்கும் மின் சாதனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம். வீடுகளில் கட்டப்படும் ஜன்னல்கள், கதவுகள் போன்றவை வென்டிலேஷன்களுடன் இருப்பின், பயனுள்ளதாக அமையும்.
  • மின்சார பயன்பாட்டை அறிவதற்கு பல்வேறு ஸ்மார்ட் சாதனங்கள் பயன்படுகின்றன. இவற்றின் மூலம், எந்த மின்சாதனப் பொருள்கள் தேவையில்லாமல் இயங்குகின்றன என்பதையும், சாதனங்களின் மின்சாரப் பயன்பாட்டையும் சரி செய்து கொள்ள முடியும்.

இது போன்ற எளிமையான வழிமுறைகளில் மின்சாரத்தை சேமித்து வைக்கும் நடைமுறைகளில் ஈடுபடுவோம். மேலும், மின்சாரத்திற்கான கட்டணத்தையும் சேமிக்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்