Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

பட்டா மாற்றம் எளிய முறையில் ஆன்லைனில்.. எப்படி விண்ணப்பிக்கலாம்.?

Gowthami Subramani September 23, 2022 & 12:10 [IST]
பட்டா மாற்றம் எளிய முறையில் ஆன்லைனில்.. எப்படி விண்ணப்பிக்கலாம்.?Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசு, அரசு சார்ந்த நடவடிக்கைகளை எளிமையான முறையில் மாற்றுவதற்கு பல்வேறு சிறந்த முறைகளைத் தருகிறது. அந்த வகையில், ஒருவர் பட்டா மாற்றத்திற்கு எங்கிருந்தாலும் விண்ணப்பிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் படி, இந்த இணையதளத்திற்குச் சென்று, பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் உடன், பட்டா மாறுதலுக்கு இனி விண்ணப்பிக்கலாம். பட்டா மாற்றத்திற்கு எளிமையான முறையில் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

பட்டா மாறுதல் வகைகள்

பட்டா மாறுதல் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவுள்ள இனங்கள்.

உட்பிரிவு இல்லாத இனங்கள்

முழுப்புலம் (பெயர் மாற்றம்)

கூட்டுப்பட்டாவாக

பட்டா மாறுதல் செய்ய யார் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதல் செய்ய நினைக்கு எந்த ஒரு குடிமகனும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

பட்டா மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களின் விவரங்கள்

பட்டா மாற்றம் செய்ய நினைக்கும் நபர்கள், கீழ்க்காணும் ஆவணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதன் படி, இந்த இணைப்பின் அளவு 3MB-க்கு மிகாமல் இருப்பது அவசியம் ஆகும்.

தமிழ்நிலம் வலைதளத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்கள்

பெயர்

முகவரி

தொலைபேசி எண்

மின்னஞ்சல் முகவரி (இமெயில் ஐடி)

கிரையப் பத்திரம்

பாகப்பிரிவினை பத்திரம்

செட்டில்மென்ட் பத்திரம்

பரிவர்தனை பத்திரம்

தானப் பத்திரம்

அக்குவிடுதலைப் பத்திரம்

மற்ற ஆவணங்கள்

இதைத் தவிர கீழ்க்காணும் ஆவணங்களும் தேவைப்படுகின்றன.

பட்டா மாறுதல் செய்யும் நபரை அறிவதற்கான சான்று

ஆதார் அட்டை

PAN அட்டை

ஓட்டுநர் உரிமம்

இந்திய கடவுச் சீட்டு

குடும்ப அட்டை

வாக்காளர் அடையாள அட்டை

குடியிருப்பு ஆவணம்

ஆதார் அட்டை

மின் கட்டண அட்டை

சமையல் எரிவாயு இரசீது

இந்திய கடவுச் சீட்டு

தொலைபேசி ரசீது

வாக்காளர் அடையாள அட்டை

தமிழக அரசு, பட்டா மாறுதல் செய்ய விரும்புபவர்கள் எங்கிருந்தாலும் செய்யலாம் என்ற நோக்கத்தில் தமிழ்நிலம் என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்