ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 ஆகியவற்றைக் கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசி முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும் , சத்துணவு திட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது.
இந்த திட்டதால் இன்னும் அதிக மக்கள் பயன்பெறும் வகையில் அடுத்த படியாக ரேஷன் கடைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே முதன் முதலில் சென்னையில் இருக்கும் அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் 7.5 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் எஸ் ஜானகி தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…