Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5G ஏலத்தில் ஜியோ வைத்த செக்…! அதானியை விட அதிகமாக டெபாசிட் செய்த ஜியோ.. என்ன காரணமா இருக்கும்….?

Gowthami Subramani July 19, 2022 & 11:30 [IST]
 5G ஏலத்தில் ஜியோ வைத்த செக்…! அதானியை விட அதிகமாக டெபாசிட் செய்த ஜியோ.. என்ன காரணமா இருக்கும்….?Representative Image.

5G அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்ற ஜியோ அதிக அளவிலான தொகையை செலவிட்டுள்ளது. அதே சமயத்தில், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் 5G அலைக்கற்றைக்கான ஏலத்தில் அதிக அளவு செலவிடும் எனக் கருதிய நிலையில் மற்ற நெட்வொர்க்குகளான ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களை விட மிகக் குறைவான தொகையை செலவிட்டுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதானி குழுமம்

5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில், அதானி குழுமம் பங்கேற்கப் போகிறது எனக் கூறிய சமயத்தில் தொழில்துறை நிர்வாகிகள் சுமார் 650 முதல் 700 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகளை கௌதம் அதானி நிறுவனம் வாங்க அனுமதிக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்த Wireless வணிகத்தில் அதானி நுழைவது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குதாரர்களை கவலையடையச் செய்தது.

5ஜி அலைக்கற்றைக்கான டெபாசிட் தொகை

எவரும் எதிர்பார்க்காத வகையில்  5ஜி அலைக்கற்றைகளை வாங்க குறைந்த அளவிலான ரூபாயை செலவிட்டுள்ளது. ஆனால், அதானிக்கு சக கோடீஸ்வரராக விளங்கும் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் மேல் ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்துள்ளது. மேலும், வோடஃபோன் ஐடியா ரூ. 2,200 கோடியும், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.5,500 கோடியையும் டெபாசிட் செய்துள்ளது.

5ஜி அலைவரிசைகளின் படி

இது, 5ஜி அலைக்கற்றைகளியப் பயன்படுத்துவதற்கு 3.5GHz மற்றும் 26GHz அலைவரிசைகளில் சாத்தியமான ஸ்பெக்ட்ரம் வாங்குதலை சுட்டிக் காட்டுகிறது. தொழில்துறை நிபுணர்களின் கருத்து படி, ஜியோ டெபாசிட் செய்தது, ஒரு பெரிய ஸ்பெக்ட்ரம் கொள்முதல் திட்டத்தைக் குறிப்பதாக அமைகிறது. அதன் படி, 4ஜி அலைவரிசைகளுக்கு முந்தைய ஏலங்களில் ரூ.57,000-க்கு மேல் செலவழித்த நிலையில், 4ஜி அல்லது வேறு சில பிராண்டுகளில் அலைக்கற்றைகளை வாங்குவதற்கு அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில், ரிலையன்ஸ் ஜியோ 3.5GHz மற்றும் 26GHz அலை வரிசைகளில் 5G அலைக்கற்றைகளை வாங்கும் என கூறப்படுகிறது. தற்போது ஜியோ நிறுவனம் டெபாசிட் செய்த ரூ.14,000 கோடி ரூபாயில் ரூ. 1.4 டிரில்லியன் மதிப்பிலான அலைக்கற்றையை வாங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச வாய்ப்பு

ஜியோ நிறுவனம் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அதானி குழுமத்தை விட அதிக அளவில் டெபாசிட் செய்ததால், 5ஜி அலைக்கற்றைகளை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்