Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமமும் இல்லை...நாணயக் கொள்கைக் குழு முடிவு | RBI Monetary Policy Meeting Repo Rate

Priyanka Hochumin Updated:
ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமமும் இல்லை...நாணயக் கொள்கைக் குழு முடிவு | RBI Monetary Policy Meeting Repo RateRepresentative Image.

நேற்று [8 ஜூன் 2023] அன்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான மூன்று நாள் நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய விகிதங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் மூன்று வெளி உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது ரெப்போ விகிதத்தை நிலையான 6.5% இல் பராமரிக்க திட்டமிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகள்:

  • உள்நாட்டு தேவை நிலை [Domestic demand condition] வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
  • இந்திய நாட்டின் காலாண்டு கணிப்பு பின்வருமாறு - Q1 8%, Q2 6.5%, Q3 6% மற்றும் Q4 5.7%.
  • இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கிறது.
  • FY23/24க்கான உண்மையான GDP வளர்ச்சி 6.5% என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • FY'23 இல் 8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த குடியுரிமை இல்லாத வைப்புகளில் நிகர வரவு, கடந்த ஆண்டு 3.2 பில்லியனாக இருந்தது.
  • பணவீக்க எதிர்பார்ப்புகளை உறுதியாக நிலைநிறுத்துவதற்கு MPC கொள்கை நடவடிக்கைகளை உடனடியாகவும் சரியானதாகவும் தொடர்ந்து எடுக்கும்.
  • புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளின் வேகம் குறைவதாக கூறப்படுகிறது.
  • நடப்புக் கணக்குப் பற்றாக்குறை Q4 இல் மேலும் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும்.
  • சில்லறை பணவீக்க கணிப்பு முந்தைய மதிப்பீட்டான 5.2% லிருந்து 5.1% ஆக குறைந்துள்ளது. மொத்த பணவீக்கம் இன்னும் 4% இலக்கை விட அதிகமாக உள்ளது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது அப்படியே இருக்கும்.
  • நாணயக் கொள்கைக் குழு (MPC), ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5% ஆக வைத்திருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது. MPC கொள்கை நிலைப்பாட்டை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்