Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சித் தகவல்.. கால நீட்டிப்பு இல்லை.. உடனே இதைப் பண்ணிடுங்க!!

Sekar July 23, 2022 & 15:24 [IST]
அதிர்ச்சித் தகவல்.. கால நீட்டிப்பு இல்லை.. உடனே இதைப் பண்ணிடுங்க!!Representative Image.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இதனால் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் 2021-22 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில், 2021-22 நிதியாண்டிற்கு ஜூலை 20 ஆம் தேதிக்குள் 2.3 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 20220-21 நிதியாண்டிற்கு கொரோனா காரணமாக வருமானவரி கணக்கு தாக்கல் டிசம்பர் 31, 2021 நீட்டிக்கப்பட்டது. அப்போது நிலுவைத் தேதிக்குள் சுமார் 5.89 கோடி பேர் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர். 

"இப்போது தேதிகள் நீட்டிக்கப்படும் என்று மக்கள் நினைத்தார்கள். அதனால் அவை சற்று மெதுவாக இருந்தன. ஆனால் இப்போது தினசரி அடிப்படையில், 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை ரிட்டர்ன்களைப் பெறுகிறோம். இது 25 லட்சம் முதல் 30 லட்சம் ரிட்டர்ன்கள் வரை சற்று அதிகரிக்கும்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும், "பொதுவாக, ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசி நாள் வரை காத்திருக்கிறார்கள். கடந்த முறை 9-10 சதவீதம் பேர் கடைசி நாளில் தாக்கல் செய்தனர். கடந்த முறை 50 லட்சத்துக்கும் மேல் கடைசி தேதியில் ரிட்டர்ன் தாக்கல் செய்தனர். அதனால் இந்த முறை கடைசி நாளில் 1 கோடிப் பேர் வந்தாலும் தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் தளத்தை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார். 

வருமான வரி விதிகளின்படி, தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிப்பட்ட வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டின் ஐடிஆர்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த நிதியாண்டின் ஜூலை 31 ஆகும்.

ஐடிஆர் மூலம், ஒருவர் இந்திய வருமான வரித் துறையிடம் தங்கள் வருமானம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் அந்த நபரின் வருமானம் மற்றும் வருடத்தில் செலுத்த வேண்டிய வரிகள் பற்றிய தகவல்கள் உள்ளன.

வருமான வரித்துறை 7 வகையான ஐடிஆர் படிவங்களை பரிந்துரைத்துள்ளது. அதன் பொருந்தக்கூடிய தன்மை வருமானத்தின் தன்மை மற்றும் அளவு மற்றும் வரி செலுத்துபவரின் வகையைப் பொறுத்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்