Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NRI Home Loan Documents | நீங்க NRI-ஆ இருந்தா வீட்டுக் கடன் வாங்க இந்த ஆவணங்கள் அவசியம்

Priyanka Hochumin Updated:
NRI Home Loan Documents | நீங்க NRI-ஆ இருந்தா வீட்டுக் கடன் வாங்க இந்த ஆவணங்கள் அவசியம்Representative Image.

பிறந்த நாட்டில் இருந்து மனை வாங்குவது, வீடு கட்டுவது என்றால் அதற்கு ஆயிரத்தெட்டு ஆவணங்கள் சரி பார்ப்பு வேலை இருக்கும். அதுவே வெளிநாட்டு வாழ் இந்தியர் (NRI) வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்றால் எவ்ளோ வேலை இருக்கும் என்று நாம் சொல்ல தேவையில்லை. இருப்பினும் அவர்களுக்கு எந்தெந்த முக்கிய ஆவணங்கள் கேட்கப்படும் என்று இந்த பதிவில் பாப்போம்.

NRI Home Loan Documents | நீங்க NRI-ஆ இருந்தா வீட்டுக் கடன் வாங்க இந்த ஆவணங்கள் அவசியம்Representative Image

அப்போ NRI-ஆ இருந்தா | NRI Home Loan Documents

வீட்டுக் கடன் வாங்குபவர் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தால் அவர்களின் சம்பளச் சான்றிதழ் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். மேலும் அவர்களின் பெயர் பாஸ்போர்ட்டில் எப்படி இருக்கிறதோ அதே போல் இருக்க வேண்டும். இல்லையெனில் அது எடுத்துகொள்ளப்படாது. அவர்கள் சமர்ப்பிக்கும் சம்பளச் சான்றிதழில் - பாஸ்போர்ட் எண், வேலைக்குச் சேர்ந்த தேதி, கடைசியாக அவர்கள் வாங்கிய சம்பளம் உள்ளிட்ட  விவரங்கள் இருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் கிடைக்கும் பணச் சலுகைகள், அதிக வேலைக்கான சம்பளம் போன்றவற்றை உறுதி செய்யும் மூன்று மாதச் சம்பளத்திற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும். கூடுதலாக எந்த நாட்டில் பணி புரிகிறாரோ, அந்த நாட்டில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யப்பட்டதற்கான ஆதாரமும் தேவை. இவை அனைத்தும் வெளிநாட்டில் ஏதேனும் நிறுவனம் அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் நம் நாட்டில் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால் கேட்கப்படும் ஆவணங்கள்.

NRI Home Loan Documents | நீங்க NRI-ஆ இருந்தா வீட்டுக் கடன் வாங்க இந்த ஆவணங்கள் அவசியம்Representative Image

சுய தொழில் செய்யும் NRI ஆக இருந்தால் | NRI Home Loan Documents Check List

இதுவே வெளிநாட்டில் சுய தொழில் செய்யும் NRI ஆக இருந்தால் வீட்டுக் கடன் வாங்க வணிகம் தொடர்பான ஆவணங்கள் தர வேண்டும். அவற்றுள் வர்த்தக உரிமம், ஸ்பான்ஸர் அக்ரிமென்ட், இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் அல்லது ஆர்கிடெக்ட் (Indian Architect or Engineer) மூலம் பெறப்பட்ட சொத்து மதிப்பீடு அறிக்கை ஆகியவை அடங்கும்.

NRI Home Loan Documents | நீங்க NRI-ஆ இருந்தா வீட்டுக் கடன் வாங்க இந்த ஆவணங்கள் அவசியம்Representative Image

NRI சம்பளதாரராக இருந்தால் தூதரக அதிகாரி (அதாவது Embassy Official) அவர்கள், வீட்டுக் கடன் வாங்கப் போகிறவர் இந்தியாவிற்கு எந்தப் பணமும் அனுப்பியதற்கான ஆவண ஆதாரமும் இல்லை என்று உறுதிப்படுத்திய வருமான ஆவணம் தர வேண்டும். மேலும் அந்த நபரின் வெளிநாட்டு வங்கியின் கடந்த ஆறு மாத பணப் பரிவர்த்தனை அறிக்கை, என்.ஆர்.ஓ/என்.ஆர்.இ வங்கிக் கணக்கின் 6 மாத அறிக்கை ஆகியவை தேவைப்படுகிறது. இது தவிர சொத்து பதிவின் போது NRI இந்தியாவில் இல்லை என்றால் அவருக்கு பதில் சொத்து பதிவு செய்ய பவர் ஆஃப் அட்டர்னி தேவைப்படும் என்பதால் அந்த ஆவணமும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

பாத்துக்கோங்க நீங்க NRI ஆக இருந்தால் இவை அனைத்தும் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக உங்கள் பாஸ்போர்ட்டில் என்ன பெயர் இருக்கிறதோ அதே போல தான் மற்ற ஆவணங்களில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். இல்லை எனில் நீங்கள் அதனை மாற்றி தான் அனுப்ப வேண்டும். இந்த எல்லா ஆவணங்களும் ஒரிஜினல் மற்றும் நகல் வைத்திருப்பது புத்திசாலித்தனம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்