Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்த யுபிஐ பரிமாற்றம்..? இந்த மாதத்தில் மட்டும் பரிவர்த்தனை எவ்வளவு தெரியுமா….?

Gowthami Subramani September 05, 2022 & 12:10 [IST]
இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்த யுபிஐ பரிமாற்றம்..? இந்த மாதத்தில் மட்டும் பரிவர்த்தனை எவ்வளவு தெரியுமா….?Representative Image.

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைக்கான பயன்பாடுகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த இந்த யுபிஐ மீது சமீபத்தில் கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில நாள்களுக்கும் முன்பு, யுபிஐ பரிவர்த்தனை மக்களின் பொது பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

அசுர வளர்ச்சி

நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலுமே யுபிஐ பரிமாற்றம் முறையிலேயே பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலானோர், ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் வசதிகளைப் பெற்றுள்ளதால், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பயன்பாடுகள் பன்மடங்கு வேகம் எடுத்து வருகிறது. இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக இல்லாத வகையில், யுபிஐ பரிவர்த்தனை மிக அதிக அளவு எட்டியதாகக் கூறப்படுகிறது.

தரவுகளின் படி

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்திற்கான யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு மிக அதிகம் எனக் கூறப்படுகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 6.57 பில்லியன் ஆகும். அதாவது, யுபிஐ-யின் மூல்ம, ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதத்தில் 628 கோடி பரிவர்த்தனைகளும், ஜூன் மாதத்தில் 586 கோடி பரிவர்த்தனைகளும் நடந்துள்ளது.

உடனடி பணப்பரிமாற்றம்

மேலும், NCPI வெளியிட்ட மற்ற தரவுகளின் படி, உடனடி பணப் பரிமாற்ற முறையான IMPS மூலம் நடந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.4.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 46.69 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாதமான ஜூலை மாதத்தில் ரூ.4.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 46/08 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வரும் பணப் பரிவர்த்தனைகள், இந்தியா டிஜிட்டல் மயமாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 100 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், 2020 ஆம் ஆண்டில் இருமடங்காக உயர்ந்து 200 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மேலும் பணப்பரிவர்த்தனைக்கான யுபிஐ பயன்பாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

UPI Users Increases | UPI Users in India 2022 | UPI Growth in India | UPI Transactions | UPI Statistics | UPI Success Rate | What is UPI | UPI Market Share 2022 | UPI Transaction Value in August 2022 | UPI Transaction History | UPI Transaction Details | UPI Transactions | Total UPI Transactions in India | UPI Market Share in India | UPI Transaction Limit | UPI Transaction Without Internet | UPI Transaction Value


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்