Petrol price today : சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல், விலையை இந்திய ரூபாயின் மதிப்பில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீத சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருவதால் இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் 7 ரூபாய் மற்றும் பெட்ரோல் 9.50 ரூபாய் குறைந்தது.
சென்னையில் கடந்த 41 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, 42வது நாளான இன்றும் ஒரு லிட்டர் பெட்ரீல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…