Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்க நகைகளில் ஹால்மாக் முத்திரை இனி கட்டாயம்! எப்படி கண்டுபிடிப்பது.?

Gowthami Subramani Updated:
தங்க நகைகளில் ஹால்மாக் முத்திரை இனி கட்டாயம்! எப்படி கண்டுபிடிப்பது.?Representative Image.

தங்க நகைக்கு ஹால்மார்க் முத்திரை அவசியம் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை எப்படி கண்டறிவது என்பது பற்றிய விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

 

தங்க நகைகளில் ஹால்மாக் முத்திரை இனி கட்டாயம்! எப்படி கண்டுபிடிப்பது.?Representative Image

தங்கத்திற்கு ஹால் முத்திரை மிக அவசியம் என கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசு ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களிடையே ஹால்மார்க் குறித்த கேள்விகள் நிறைய எழுந்துள்ளது. குறிப்பாக, HUID எனப்படும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏன்? அது நம் நகைகளில் இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
 

 

தங்க நகைகளில் ஹால்மாக் முத்திரை இனி கட்டாயம்! எப்படி கண்டுபிடிப்பது.?Representative Image

ஹால்மார்க் எண்

ஹால்மார்க் முத்திரை அதாவது HUID என்பது 6 எண்களைக் கொண்ட ஒரு குறியீடு ஆகும். இந்த ஹால்மார்க் முத்திரையானது, Assaying & Hallmarking Centre என்ற இடத்தில் பதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகைக்கும் இந்த ஹால்மார்க் முத்திரை பதிவு என்பது மிகவும் அவசியமாகும். இது, அந்த நகைக்கு மதிப்பளிக்கிறது. இது எளிதில் தேடுவதற்கு உதவுகிறது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள் உள்ளடக்கிய தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இந்த தனித்துவமான அடையாள எண்களானது ஒவ்வொரு நகைக்கும் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

தங்க நகைகளில் ஹால்மாக் முத்திரை இனி கட்டாயம்! எப்படி கண்டுபிடிப்பது.?Representative Image

ஏன் முக்கியம்?

தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் அவசியமாகக் கருதப்படுகிறது. இது இந்திய தர நிர்ணய அமைவனம் அதாவது BIS மூலம் தரப்படுகிறது. இது தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்துகிறது. எனவே, தான் தங்க நகைகளை வாங்கும் போது அதில் ஹால்மார்க் முத்திரை இடம் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 

தங்க நகைகளில் ஹால்மாக் முத்திரை இனி கட்டாயம்! எப்படி கண்டுபிடிப்பது.?Representative Image

ஹால்மார்க் முத்திரை வகைகள்

ஹால்மார்க் முத்திரையானது குறிப்பிடப்படுவதற்கென முக்கிய காரணம் உள்ளது. பொதுவாக தங்க நகைகளில் முழுவதுமாக தங்கம் மட்டுமே கலக்கப்படுவதில்லை. இத்துடன், இதர உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இவையே தங்க நகைகளை வடிவமைப்பதற்கு உதவுகிறது. ஹால்மார்க் முத்திரையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

22 காரட் தங்கமானது 22K 916 ஹால்மார்க் எனப்படுகிறது. இந்த ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதில், 91.6% தங்கம் இடம் பெற்றிருக்கும்.

அடுத்து, 18 காரட் தங்கமானது 18K 750 ஹால்மார்க் ஆகும். இந்த வகை ஹால்மார்க் முத்திரை ஆனது, 75% தங்கம் இடம்பெற்றிருப்பதைக் குறிக்கிறது.

மூன்றாவதாக, 14 காரட் தங்கத்தில் 14K 585 என்ற ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இந்த முத்திரை இடம்பெற்ற தங்கத்தில் 58.5% தங்கம் இடம் பெற்றிருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை