Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 வருடத்திற்கு பிறகு பெட்ரோலே தேவைப்படாது.. மத்திய அமைச்சர் அதிரடி!!

Sekar July 09, 2022 & 14:43 [IST]
5 வருடத்திற்கு பிறகு பெட்ரோலே தேவைப்படாது.. மத்திய அமைச்சர் அதிரடி!!Representative Image.

இந்தியாவில் வாகனங்களில் பெட்ரோல் பயன்பாடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒழிந்துவிடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் அகோலாவில் அவருக்கு டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் க்ரிஷி வித்யாபீத் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அங்கு உரையாற்றிய நிதின் கட்காரி இதை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பசுமை எரிபொருள் பெட்ரோல் தேவையை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் பசுமை ஹைட்ரஜன், எத்தனால் ஃப்ளெக்ஸ் எரிபொருள், சிஎன்ஜி அல்லது எல்என்ஜியில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாய வளர்ச்சியை 12 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களிடம் கட்காரி வேண்டுகோள் விடுத்தார்.

மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மிகவும் திறமையானவர்கள், புதிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துடன் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

முன்னதாக ஜூன் 17 ஆம் தேதி, அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும் ஒரு வருடத்திற்குள் நாட்டில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று கட்காரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக பயிர் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை