Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PF Pension Scheme in India: மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு…. ரூ.1 லட்சம் பென்சன் தரும் திட்டம்...? எப்படி பயன்பெறுவது...?

Gowthami Subramani May 24, 2022 & 15:40 [IST]
PF Pension Scheme in India: மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு…. ரூ.1 லட்சம் பென்சன் தரும் திட்டம்...? எப்படி பயன்பெறுவது...?Representative Image.

PF Pension Scheme in India: முதுமைக்காலத்தில், நாம் நிம்மதியாக ஓய்வு எடுக்க இந்த இளமைக்காலத்திலேயே நாம் முதலீட்டை ஈட்ட வேண்டும். இந்த இளமைக்காலத்தில் அதிக அளவு வருமானம் ஈட்டுவதால் மட்டும், இது சாத்தியமாகாது. நம்முடைய உழைப்பால் கிடைக்கும் வருமானத்தைச் சரியான அளவில், சரியான காலத்திலிருந்து சேமிப்பதன் மூலம், நம்முடைய முதுமைக்காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் சிறப்பாக இருக்கலாம் (PF Pension Scheme in India).

அனைத்துத் துறைகளுக்கும்

மக்களின் நலன் கருதி, மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இருப்பது தேசிய ஓய்வூதிய அமைப்பு. இதன் முக்கிய நோக்கம், இளமைக்காலத்தில் மக்களின் சேமிப்பு அவர்களின் முதுமைக்காலத்தில் ஓய்வூதியமாகக் கிடைக்கும் (National Pension Schemes 2022 Latest News).

வருங்காலத்தில் நாம் சேமிக்கும் வருமானத்தை மாதந்தோறும் ஓய்வூதியமாகப் பெறலாம். பெரும்பாலும், இத்திட்டம் முதலில் 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், 2009 ஆம் ஆண்டு, பாமர மக்களுக்கு உதவும் வகையில் அனைத்துப் பிரிவினருக்கும் வழங்கப்படுமாறு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புபவர்கள், இதன் அடிப்படை விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் (National Pension Scheme Latest News).

தேசிய ஓய்வூதிய அமைப்பு (What is National Pension Scheme)

தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது முதியோர் பாதுகாப்பு வழங்குவதற்காக, இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட முதலீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும்.

இந்த பாதுகாப்பான திட்டத்தின் மூலம்,  நீண்ட கால சேமிப்புக்கு வழி வகுக்கக் கூடியதாகும். இந்த கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம், முதியோர்களுக்கு ஒரு சிறந்த பலனை அளிக்கும்.

Also Read | மண் இல்லாம விவசாயம் செய்ய முடியுமா..? அதுவும் இவ்வளவு விலை கம்மியா..!

இரண்டு பிரிவுகளில் சேமிப்பு

இந்த NPS திட்டத்தில், டையர் 1 (Tier-1) மற்றும் டையர் 2 (Tier-2) என இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன (National Pension Scheme 2022).

Tier 1 Scheme: இந்த வகை கணக்கு ஓய்வூதிய சேமிப்பு முக்கியமானதாக உள்ளது. இதில், ஒரு நபர், அக்கவுண்டைத் திறக்கும் போது, குறைந்தபட்சமாக ரூ.500-ஐ அக்கவுண்டில் செலுத்தி இருக்க வேண்டும்.

Tier 2 Scheme: இந்த டையர் 2 கணக்கில், முதலீடு செய்யும் போது அக்கவுண்டில் குறைந்தபட்சம் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும். இந்த வகை கணக்கில் சேமிக்கும் பணத்தை முழுத்தொகையாக திரும்பப் பெறலாம். இந்தக் கணக்கில் வரிச் சலுகைகள் எதுவும் இல்லை.

என்பிஎஸ் திட்டத்தின் அம்சங்கள்

இத்திட்டத்தில், 18 வயது முதல் 65 வயது கொண்ட எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் இணைந்து சேமிப்பைத் தொடங்கலாம்.

இந்த திட்டம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்காக

ஜனவரி 1, 2004 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பின் இணைந்த மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வருவார்கள்.

தனி நபருக்கான

இத்திட்டத்தின் கீழ், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் முதல் தனி நபராக முன் வந்து இந்த திட்டத்தில் சேரும் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ரூ. 1 லட்சம் பென்சன் தொகை

இந்த NPS திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும், ரூ. 5000 முதலீடு செய்வதன் மூலம், பென்சன் தொகையாக மாதந்தோறும் ரூ. 1 லட்சத்தை ஓய்வூதியக் காலத்தில் பெறலாம். 25 வயதில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைவதன் மூலம், இந்த ஓய்வூதியத்தைப் பெற முடியும் (Pension Scheme for 1 Lakhs).

Also Read | விவசாயம் செய்ய அரசு வழங்கும் 5 லட்சம் கடன் தொகை….! அதன் விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

நன்மைகள்

இத்திட்டத்தின் கீழ் சேரக் கூடிய நபர்களுக்கு 8 முதல் 10 சதவீதம் வரையிலான வட்டி வீதத்தில் லாபம் பெறலாம்.

NPS திட்டத்தின் கீழ் சேமிப்பு வைக்கும் நபர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80C-ன் படி, வரிச்சலுகை அளிக்கப்படுகிறது (Central Government Schemes 2022).

இந்த வகையான திட்டத்தில் சேமிப்பதன் மூலம், மிகுந்த பலன்களைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்