Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இனி வீடு தேடி சேவை… மத்திய அரசின் அமோக அறிவிப்பு... குஷியில் பென்சன்தாரர்கள்..

Gowthami Subramani November 21, 2022 & 17:00 [IST]
இனி வீடு தேடி சேவை… மத்திய அரசின் அமோக அறிவிப்பு... குஷியில் பென்சன்தாரர்கள்..Representative Image.

பென்சன் பெறும் நபர்கள் அனைவரும் தங்களது ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனி வீடு தேடி சேவை… மத்திய அரசின் அமோக அறிவிப்பு... குஷியில் பென்சன்தாரர்கள்..Representative Image

ஆயுள் சான்றிதழ்

மத்திய அரசின் கீழ் பென்சன் பெறும் ஒவ்வொரு மூத்த குடிமக்களும், தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதாவது, பென்சன் வாங்குபவர்கள் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.

அதன் படி, கொரோனா போன்ற பல்வேறு பிரச்சனைகளால், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி, இந்த நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு அளிக்கப்பட்டது. இந்த சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே, தொடர்ந்து பென்சன் தொகை பெற முடியும்..

இனி வீடு தேடி சேவை… மத்திய அரசின் அமோக அறிவிப்பு... குஷியில் பென்சன்தாரர்கள்..Representative Image

தபால் துறை மூலம்

இவ்வாறு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் மூத்த குடிமக்கள் என்பதால் அவர்களால் நேரடியாக வந்து ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கடினமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு தபால் துறை மூலம் சமர்ப்பிப்பதற்கான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன் படி, இந்த முறை மூலம், தபால்காரர்கள் ஓய்வூதியம் பெறும் நபர்களின் வீட்டுக்கே சென்று, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் அல்லது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறை அளிக்கும் இந்த சேவையானது, மூத்த குடிமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

இனி வீடு தேடி சேவை… மத்திய அரசின் அமோக அறிவிப்பு... குஷியில் பென்சன்தாரர்கள்..Representative Image

சமர்ப்பிக்கும் முறை

மேலும், இதில் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் EPFO ஓய்வூதியம் பெறுவோர் நவம்பர் 1, 2022 ஆம் நாள் முதல் தங்களது உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கடினமாக ஒன்றாகும். எனவே, இதில் வீட்டிலிருந்தபடியே கைவிரல் ரேகையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

இதில், ஓய்வூதியதாரர்கள், அவர்கள் இருக்கும் பகுதியின் தபால்காரரிடம் ஆதார் எண், PPO எண், தொலைபேசி எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

பின் கைவிரல் ரேகை வைத்து பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

இதற்கு, தபால்காரரிடம் சேவை கட்டணமாக ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும்.

இனி வீடு தேடி சேவை… மத்திய அரசின் அமோக அறிவிப்பு... குஷியில் பென்சன்தாரர்கள்..Representative Image

சேமிப்புக் கணக்கு துவக்கம்

இந்திய அஞ்சல் துறையின் சார்பில் இயக்கப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) ஆனது, நாடு தழுவிய அளவில் கடந்த செப்டம்பர் 1, 2018 ஆம் நாள் துவங்கப்பட்டது. இந்த குறுகிய காலத்தில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள 1,36,000 அஞ்சல் அலுவலங்களுக்கு வங்கி சேவை விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 5 கோடிக்கும் அதிகமானோரால் சேமிப்புக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்