Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Phonepe Gold Investment Tamil: PhonePe இருக்கா..? இனி தங்கத்தையும் SIP முறையில் வாங்கலாம்… தங்கத்திற்குப் பணத்தையும் பெறலாம்….

Gowthami Subramani May 25, 2022 & 16:58 [IST]
Phonepe Gold Investment Tamil: PhonePe இருக்கா..? இனி தங்கத்தையும் SIP முறையில் வாங்கலாம்… தங்கத்திற்குப் பணத்தையும் பெறலாம்….Representative Image.

Phonepe Gold Investment Tamil: நம் அனைவருக்கும் சேமிப்பு என்பது மிக முக்கியமானதொன்றாகிறது. அந்த வகையில் சேமிப்பு, தங்க நகைகளாகவோ, பணமாகவோ இருக்கலாம். தற்போது பெரும்பாலும், நகை அணிகலன்கள் மீதான முதலீடு மிக அதிகமாக இருந்து வருகிறது (PhonePe New Update).

தங்கத்தால் தப்பித்த இலங்கை

நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கக் கூடிய நிலைக்கு வரும் என்பதற்கு உதாரணமாய் விளங்குவது இலங்கை. பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி வந்த போதும் அதிலிருந்து தப்பித்தவர்கள் உள்ளார்களா என்ற கேள்வி இன்றும் அனைவரின் மனதில் எழுந்து வருகிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்தவர்கள், தங்கத்தால் முதலீடு செய்வதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது (Phonepe Gold Investment Tamil).

டிஜிட்டல் முறை

தங்கத்தின் மீதான ஆர்வம் பொதுமக்களுக்கு மிக அதிகமாக உள்ளது. பணத்தின் மூலமாக தங்கம் வாங்குவதை அடுத்து, தற்போது டிஜிட்டல் முறையில் 100 ரூபாய்க்குக் கூட தங்கம் வாங்குவதற்கான வசதி பெரும்பாலும் எல்லோராலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

PhonePe செயலி

PhonePe என்பது கூகுல் பே-ஐப் போல இயங்கக் கூடிய ஒரு பணப் பரிவர்த்தனை முறையாகும். இந்த செயலி தற்போது பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது PhonePe செயலி மக்களுக்கு உதவும் வகையில், SIP திட்டத்தின் மூலம் தங்கத்தை வாங்கலாம் என அறிமுகப்படுத்தியுள்ளது (Latest News About PhonePe). இந்தத் திட்டத்தின் மூலம், PhonePe வைத்திருக்கும் ஒவ்வொரு பயனரும், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை 24 காரட் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று குறிப்பிடப்படுகிறது (How To Invest Amount in PhonePe). இதில் முதலீடு செய்த தங்கம் வங்கி லாக்கரில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

செயலியின் முதலீடு

PhonePe-யில் தனி நபருக்கான UPI-ஐ பயன்படுத்தி இது செயல்படுகிறது (PhonePe UPI SIP). இதன் படி, UPI நம்பரைக் கொண்டு பயனர்கள் மாதந்தோறும் முதலீடு செய்யலாம். மேலும், இதில் ஒரு முறை SIP மூலம் தங்கத்தை முதலீடு செய்தால், மாதம் மாதம் தானாகவே முதலீடு செய்யப்படும் என்று போன்பே நிறுவனம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது (PhonePe Gold Investment Review).

தங்கத்திற்குப் பணம்

இதே போல, பயனர்கள் முதலீடு செய்து வாங்கிய தங்கத்தை எந்த நேரத்திலும் விற்று பணமாக வங்கிக் கணக்கில் மாற்றிக் கொள்ளலாம் (PhonePe Gold Investment). மேலும், வாங்கிய தங்கத்திற்கு கடன் பெறும் வசதியையும் PhonePe அளித்துள்ளது (PhonePe News).

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை