Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Schemes for Farmers in Tamilnadu: அரசு வெளியிட்ட புதிய திட்டம்…! இனி விவசாயிகளுக்குக் கவலை இல்லை…!

Gowthami Subramani May 26, 2022 & 13:25 [IST]
Schemes for Farmers in Tamilnadu: அரசு வெளியிட்ட புதிய திட்டம்…! இனி விவசாயிகளுக்குக் கவலை இல்லை…!Representative Image.

Schemes for Farmers in Tamilnadu: விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில், தரிசு நிலங்களை சாகுபடி செய்து, நீர் வளத்தைப் பெருக்கி, விளைச்சலை மேம்படுத்துவதற்கு, திமுக அரசு ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது. திமுக அரசின் மாபெரும் சிறந்த திட்டமாக விளங்கும் இத்திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகும்.

அதன் படி, ஐந்தாண்டுகளில் 12,525 கிராம பஞ்சாயத்துகளில், இந்த ஃப்ளாக்ஷிப் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் திருப்தி

தமிழகத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் பயிர்ச் சேர்க்கையை அதிகரிப்பது மிக முக்கிய நோக்கமாகும். மேலும், விளைச்சலைப் பெருக்கி, விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கக் கூடியதாக இத்திட்டம் அமைய உள்ளது (Farmers Scheme in Tamilnadu).

அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையுடன் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் கிராமங்களில் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட தொகை

ஐந்தாண்டுகளுக்குள் பல்வேறு கிராமங்களுக்கு இத்திட்டத்தை முழுமையாகக் கொண்டு வர நினைக்கும் இத்திட்டம் முதல் ஆண்டில், 1997 ரூபாய் 227 கோடியிலும், இரண்டாம் ஆண்டில் 300 கோடி ரூபாய் 3,204 கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது (Farmers Schemes in Tamil). மேலும், கிராமங்களில் அனைத்து அரசு துறைகளின் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய நோக்கம்

ஊரக வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட வேண்டிய இத்திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகளும் பலனடைவர். இதில், கிராம அளவில் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு, நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (Tamilnadu Farmers Scheme in Tamil).

இதற்கு முதல் அடையாளமாக, கிராமத்தில் உள்ள வறண்ட நிலக் குழுக்களில் இருக்கும் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், அவர்களுக்குத் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடுவதற்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் (Farmers Benefits Schemes in Tamil). அது மட்டுமல்லாமல், தென்னை நாற்றுகள், பழம் தரும் மரக்கன்றுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆழ்துளை கிணறு தோன்றுவதற்கான ஆணைகளையும் பிறப்பித்துல்ளார். இவ்வாறு மானிய வசதிகளுடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், விவசாயிகளுக்கு மிக அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது (Farmers Benefits Schemes).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்