Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Share Market Meaning in Tamil: ஷேர் மார்க்கெட்-ல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா..? அப்ப மொதல்ல இத செக் பண்ணுங்க…..

Gowthami Subramani May 30, 2022 & 10:55 [IST]
Share Market Meaning in Tamil: ஷேர் மார்க்கெட்-ல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா..? அப்ப மொதல்ல இத செக் பண்ணுங்க…..Representative Image.

Share Market Meaning in Tamil: இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், ஷேர் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட், பங்குகள், வர்த்தகம் போன்றவற்றைக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிசினஸில் உள்ளவர்களுக்கும், ஷேர்மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கும் ஷேர் மார்க்கெட் பற்றியும், ஸ்டாக் மார்க்கெட் பற்றியும் தெரிந்திருக்கும். ஆனால், பெரும்பாலானோர் இதைப் பற்றி கற்றுக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில பேர், இந்த ஷேர் மார்க்கெட் என்றால், என்னவென்று தெரியாமல் இருப்பார்கள் (Share Market Meaning in Tamil).

பங்குச் சந்தைகள்

பங்குகள், சந்தைகளில் வெளிப்படையாக வர்த்தகம் செய்யப்படுவது பங்குச் சந்தைகள் என அழைக்கப்படும். பங்குச் சந்தையில் நடைபெறக் கூடிய இந்த வர்த்தகத்தில் இரண்டு வகையான மார்க்கெட்டுகள் உள்ளன. அவை ஷேர் மார்க்கெட் (Share Market) மற்றும் ஸ்டாக் மார்க்கெட் (Stock Market) ஆகும்.

இவை இரண்டுமே பங்குகளை வர்த்தகம் செய்யக் கூடிய ஒன்றாகும். இவற்றில் ஷேர் மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்யக் கூடிய மார்க்கெட் ஆகும் (Share Market Meaning Tamil). ஆனால், ஸ்டாக் மார்க்கெட்டில், பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யவும் மற்றும் வர்த்தகம் செய்யவும் முடியும் (Stock Market Meaning Tamil).

மேலும், ஒரு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை மட்டுமே வாங்கவும் விற்கவும் முடியும். பங்குச் சந்தையில், பங்குகளை வாங்குபவர்களும், விற்பவர்களும் சந்திக்கின்றனர் (Share Market Investments Details Tamil). இந்தியாவில் முதன்மையாக தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் உள்ளன. இதனையடுத்து, இந்தியாவில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்குச் சந்தைகள் என இரண்டு வகையான பங்குச் சந்தைகள் இருக்கின்றன (Share Market Types Tamil).

முதன்மை பங்குச் சந்தைகள் (What is Primary Market in Tamil)

பணம் திரட்டக் கூடிய குறிக்கோளுடன் செயல்பட்டு குறிப்பிட்ட அளவு பங்குகளை வெளியிடக் கூடிய ஒரு நிறுவனத்தின் இடமாக இருப்பது முதன்மை பங்குச் சந்தைகள் ஆகும். முதன்மை பங்குச் சந்தையில் பொதுப் பட்டியலிடப்படுவதுடன் அதற்கான பங்குகளை வெளியிடுவதும் இதன் நோக்கமாகும். இவ்வாறு ஒரு நிறுவனம் முதலில் பங்குகளை விற்க முடிவு செய்வது ஆரம்ப பொது வழங்கல் (Initial Public Offering) என அழைக்கப்படுகிறது (Primary Market).

இரண்டாம் நிலைச் சந்தைகள் (What is Secondary Market in Tamil)

ஒரு நிறுவனத்தினுடைய புதிய பத்திரங்கள், முதன்மை நிலை பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்படும். மேலும், அவை இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீடுகள் விட்டு வெளியேறவும், அதன் பங்குகளை விற்பதற்கான வாய்ப்பையும் பெறுவர். முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் நபர்கள், தற்போதைய சந்தை விலையில் வாங்குவர். அதாவது, பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் நபர்கள் சந்தையில் எந்த விலையை நிர்ணயிக்க ஒப்புக் கொள்கிறார்களோ அதன் அடிப்படையில், இரண்டாம் நிலை சந்தையில் பங்குகளை வாங்குவார் (Secondary Market Meaning in Tamil).

குறிப்புகள்

பங்குச் சந்தை என்பது, நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும், விற்பதற்குமான ஏலம் நடைபெறும் இடமாகும் (How To Invest in Share Market).

இதில் ஒரு நிறுவனம் அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அதிக பணம் தேவைப்படும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர்கள் மக்கள் உதவியை எதிர்பார்ப்பர். இந்த காரணத்திற்காக, அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்து, அவற்றை விற்கும் முயற்சியில் ஈடுபடுவர். இவ்வாறு பங்குச் சந்தையில் பங்குகளை விற்பது IPO என்று அழைப்பர்.

இவ்வாறு பங்குகளை வாங்கக் கூடிய ஒவ்வொருவருக்கும், அந்த நிறுவனத்தினுடைய லாப, நஷ்டங்களில் பங்கு உண்டு.

தற்போதைய சூழ்நிலையில், எந்த ஒரு துறையிலும் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அந்த வகையில் பங்குச் சந்தையில் இல்லாமல் இருப்பது மட்டும் சாத்தியமாகுமா..? பங்குச் சந்தைகளில் ஏற்படக் கூடிய முரண்பாடுகளைகண்காணிக்க ஓர் அமைப்பு உள்ளது. அவை, Securities and Exchange Board of India (SEBI).

மேலும், இந்தியாவில் இயங்கக் கூடிய பங்குச் சந்தையை நடத்துவதற்கு இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன. அவை மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்