Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியா.. ரகுராம் ராஜன் பளீச்!!

Sekar July 31, 2022 & 17:02 [IST]
இந்தியாவில் பொருளாதார நெருக்கடியா.. ரகுராம் ராஜன் பளீச்!!Representative Image.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, நிதிப் பாதுகாப்பு என்பது நிரந்தரக் கவலையாகிவிட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் சமீபத்திய தலைப்புச் செய்திகள் பல இந்தியர்களை கவலையடையச் செய்கின்றன. 

இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி பற்றிய எச்சரிக்கைகளை இந்தியாவில் எதிர்கட்சிகள் பல சமயங்களில் சுட்டுகின்றன. ஆனால் உண்மையில் இந்தியாவில் இத்தகைய வீழ்ச்சி சாத்தியமா? புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜனின் சமீபத்திய வார்த்தைகள் இந்தியர்களை நிம்மதிப் பெருமூச்சு விடுவதாக இருக்கும்.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார பிரச்சினைகளை இந்தியா எதிர்கொள்ளாது என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது, வெளிக்கடன்கள் குறைவு மற்றும் ரிசர்வ் வங்கி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று அவர் பாராட்டினார்.

"நம்மிடம் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. கையிருப்பை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற பிரச்சனைகள் நமக்கு இல்லை. நமது வெளிநாட்டு கடன்களும் குறைவாகவே உள்ளன" என்று ரகுராம் ராஜன் கூறினார்.

இலங்கை மற்றும் பா\கிஸ்தானின் ஆழமான நிதி சிக்கல்கள் மிகக் குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பெருகிவரும் வெளிநாட்டுக் கடன்களிலிருந்து எழுகின்றன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த அந்நியக் கடன் மற்றும் அதிக அன்னியச் செலாவணி இருப்பு காரணமாக இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளது என ரகுராம் ராஜன் கூறினார்.

சமீபத்திய ஆர்பிஐ தரவுகளின்படி, ஜூலை 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி $571.56 பில்லியனாக உள்ளது. 2022 மார்ச் இறுதியில் வெளிநாட்டுக் கடன் $620.7 பில்லியனாக இருந்தது. இலங்கையின் பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்பு $50 மில்லியனுக்கும் கீழே குறைந்துள்ளது. இது வெளிநாட்டு கடன்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஜூலை 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 754 மில்லியன் டாலர் சரிவுக்குப் பிறகு 8.57 பில்லியன் டாலராக இருந்தது என்று பாகிஸ்தான் மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்