Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னாது ஒரு டீ பேக் 10 லட்சமா? 

Nandhinipriya Ganeshan September 12, 2022 & 17:20 [IST]
என்னாது ஒரு டீ பேக் 10 லட்சமா? Representative Image.

வெறும் 21 வயதில் இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் நாட்டின்  ராணியாக அரியணை ஏறியவர். கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தனது 96 வது வயதில் காலமானார். அந்தவகையில், பிரிட்டன் நாட்டின் புதிய அரசனாக எலிசபெத்தின் மகன் சார்லஸ் பொறுப்பேற்றுள்ளார். இவருடைய உடல் தற்போது அஞ்சலிக்காக அவருடைய அரண்மனையில் வைக்கப்பட்டு உள்ளது. முழு உலகமும் ராணியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பெண்களுக்கு பிடித்தவர்களாக மாற ஆண்கள் இத மட்டும் ஒழுங்கா பண்ணுனா போதுமாம்... 

இந்நிலையில், பிரிட்டன் ராணியின் மறைவை நினைவுகூரும் விதமாக அவர் தொடர்பான சில பொருட்களை ஏலம் விட முடிவுசெய்துள்ளனர். அதில் ஒன்று தற்போது பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது வேறு எதுவும் இல்லை, ராணி எலிசபெத் 1990 களில் பயன்படுத்திய ஒரு டீ பேக். 

இந்த டீ பேக் வீண்ட்சார் அரண்மனையில் இருந்து கடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த டீ பேக் இரண்டு நாட்களுக்கு முன்பு ஈபே தளத்தில் ஏலம் விடப்பட்ட நிலையில் பலர் விருப்பம் தெரிவித்தனர். இறுதியாக, இந்த பயன்படுத்தப்பட்ட லிப்டான் டீ பேக் சுமார் 12,000 டாலருக்கு (இந்திய மதிப்பில் 9.5 லட்சம் ரூபாய்) ஏலம் விடப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்