Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓலா நிறுவனத்திற்கு ஆப்பு.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு!!

Sekar July 13, 2022 & 19:35 [IST]
ஓலா நிறுவனத்திற்கு ஆப்பு.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு!!Representative Image.

ப்ரீ-பெய்டு பேமென்ட் மற்றும் கேஒய்சி தொடர்பான சில விதிமுறைகளுக்கு இணங்காததற்காக ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி இன்று ரூ.1.67 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், பிரபல ஆன்லைன் கார்/பைக் டாக்ஸி புக்கிங் நிறுவனமான ஓலாவின் துணை நிறுவனமாகும். இது இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தனிநபர் கடன்கள் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளின் அடிப்படையில் கடன் வழங்குவது போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

கேஒய்சி தேவைகள் குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகளுக்கு அந்த நிறுவனம் இணங்கவில்லை என்பது கவனிக்கப்பட்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக தனது அறிவுறுத்தல்களுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கேட்டு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நிறுவனத்தின் பதிலைப் பரிசீலித்த பிறகு, ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்தது என்று ஆர்பிஐ வங்கி தனது அறிக்கையில் மேலும் கூறியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்