Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு.. விரைவில் வெளியாகும் e-Rupee.. எதுக்கு தெரியுமா..?

Gowthami Subramani October 08, 2022 & 14:30 [IST]
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு.. விரைவில் வெளியாகும் e-Rupee.. எதுக்கு தெரியுமா..?Representative Image.

ரிசர்வ் வங்கி விரைவில், குறைந்த பயன்பாட்டிற்கு மின்-ரூபாயை பைலட் அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது, இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி, இந்த டிஜிட்டல் கரன்சியை சோதனை செய்யும் போது, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டு நிகழ்வுகளுக்காக இ-ரூபாய் பைலட் விரைவில் வெளியீட்டை தொடங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் பற்றிய கருத்துக் குறிப்பில் மத்திய வங்கி தெரிவித்ததாவது,”இது போன்ற பைலட் தொடக்கங்களின் அளவு மற்றும் அதன் நோக்கம் விரிவடையும் போது, இந்த இ-ரூபாய் குறிப்பிட்ட நன்மைகள் மற்றும் அம்சங்களைப் பற்றி அவ்வப்போது ரிசர்வ் வங்கி தொடர்ந்து தொடர்பு கொள்ளும்” எனக் கூறியுள்ளது.

மேலும், இந்தக் கருத்துக் குறிப்பு பயன்படும் தொழில்நுட்பம், அதன் வடிவமைப்புத் தேர்வுகள், டிஜிட்டல் ரூபாயின் பயன்பாடுகள் மற்றும் அதன் வெளியீட்டு வழிமுறைகள் போன்ற முக்கிய விஷயங்களை விவாதிக்கிறது.

இதனைத் தொடர்ந்து, Banking system, Monetary Policy, Financial Stability, Analyses Privacy issues போன்றவற்றில் CBDC-ன் தாக்கங்களை ஆராய்வதுடன், தனியுரிமை சிக்கல்களையும் பகுப்பாய்வு செய்கிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்