Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சில்லறை வர்த்தக பணவீக்கம் விர்ர்ர்.. பொதுமக்கள் ஷாக்!!

Sekar October 12, 2022 & 19:57 [IST]
சில்லறை வர்த்தக பணவீக்கம் விர்ர்ர்.. பொதுமக்கள் ஷாக்!!Representative Image.

செப்டம்பரில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.41 சதவீதமாக உயர்ந்தது. இதில் முக்கியமாக விலை உயர்ந்தது உணவுப் பொருட்கள் தான். மேலும் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக, சில்லறை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச அளவான 6 சதவீதத்தை விட அதிகமாகவே உள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவு, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக இருந்தது.

முன்னதாக ஆகஸ்டில் 7 சதவீதமாகவும், 2021 செப்டம்பரில் 4.35 சதவீதமாகவும் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம் செப்டம்பரில் 8.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் இருப்பதால், ரிசர்வ் வங்கி, இப்போது, ​​பணவீக்கத்தை 4 சதவீதமாகக் கட்டுப்படுத்தத் தவறியதற்கான காரணங்களை மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். சில்லறை பணவீக்கம் 2-6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்