Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SBI Bank Latest News: ஜியோ உடன் இணைய மறுபரீசிலனை செய்யும் SBI….

Gowthami Subramani May 17, 2022 & 17:15 [IST]
SBI Bank Latest News: ஜியோ உடன் இணைய மறுபரீசிலனை செய்யும் SBI….Representative Image.

SBI Bank Latest News: கடந்த 2018 ஏப்ரல் மாதம், எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கிடையே ஒரு கூட்டு முயற்சி அமைக்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களின் ஒப்பந்த காலம் ஐந்தாண்டு காலம் ஆகும். அதன் படி, அடுத்த ஆண்டும் தொடக்கத்தில் இது முடிவடைய உள்ளது.

பரஸ்பர ஒப்பந்தம்

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் படி, முக்கிய வணிக பங்குதாரர்களில் ஒன்றாக விளங்கும் ரிலையன்ஸ் செப்டம்பர் மாதத்திற்குள் ஸ்ட்ராடஜியை எஸ்பிஐ-யிடம் தர உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவ்வாறு நடந்தால் பிரிந்து செல்வதாகவும் ஒப்பந்தம் செய்துள்ளது என SBI-யின் வங்கியாளராக விளங்கும் ஒருவர் கூறியுள்ளார் (SBI Bank Latest News).

கூட்டணி எதிர்பார்ப்புகள்

இந்த எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணி, மற்ற கட்டண நிறுவனங்களைத் தாழ்த்தி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், ரிலையன்ஸ் ரீடெய்லின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பேமெண்ட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பான்-இந்தியா தொலைத்தொடர்பு நெட்வொர்க் பேமென்டுகள் போன்றவை வங்கிக்கு அளிக்கும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியால் எதிர்பார்க்கப்பட்டது.

அதே சமயம், SBI தனது வணிகத்தை விரிவுபடுத்தி, அதிக வணிகத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜியோ மற்றும் எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கை (SBI Latest News)

ஆனால், எஸ்பிஐ ஒரு முதலீட்டு பங்குதாரராக மட்டுமே இருந்தது. இந்த நான்கு வருட காலகட்டத்தில், ஜியோ பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களை கையகப்படுத்துவதில் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை என SBI-யின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டின் முடிவில்  ஜியோ பேமென்ட்ஸ் வங்கி தெரிவித்ததாவது, ரிலையன்ஸ் ரீடெய்லுடன் கூட்டாக ஜியோ மார்ட் நடப்புக் கணக்குகளைத் தொடங்கியுள்ளாதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்குகளை உடனடியாகத் தொடங்குதல், சரியான நேரத்தில் தீர்வு வழங்குதல், பாயின்ட்-ஆஃப்-சேல் பரிவர்த்தனைகளுக்குப் பணம் செலுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

வங்கிப் பின்னணியில் பணம் செலுத்துவதற்கான யோசனை ஜியோ சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒருங்கிணைந்தது. ஆனால், வங்கி ஒருங்கிணைக்கப்படவில்லை. 2021 ஆம் ஆண்டின் இறுதியில், ஜியோ பேமென்ட்ஸ் வங்கி ரூ. 13.39 கோடி வருவாயை ஈட்டு ரூ.89.7 கோடி நஷ்டம் அடைந்துள்ளது (SBI Latest News Today). ஆனால், முந்தைய ஆண்டில் ரூ.19.39 கோடி வருவாயில் ரூ.50.36 லட்சம் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், 2021 ஆம் ஆண்டில், ஜியோ பேமென்ட்ஸ் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை அதிகாரி வங்கிக் கணக்குகளை மறு நியமனம் செய்வதற்கு தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்