Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ration Card New Update: ரேஷன் கார்டு உங்கக்கிட்ட இருக்கா..? இனி இப்படித்தான் பொருள்கள் வாங்க முடியும்….!

Gowthami Subramani May 30, 2022 & 09:35 [IST]
Ration Card New Update: ரேஷன் கார்டு உங்கக்கிட்ட இருக்கா..? இனி இப்படித்தான் பொருள்கள் வாங்க முடியும்….!Representative Image.

Ration Card New Update: தமிழகத்தில் ரேஷன் பொருள்களை வாங்குவதற்கு இந்த முறையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதில் மிக முக்கியமான ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்குவதில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய ரேஷன் அட்டை

அந்த வகையில், புதிய வகையான ரேஷன் கார்டுகளைப் பெறுவதில் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லக் கூடிய நபர்கள் புதிதாக ரேஷன் அட்டைகளை மாற்றுவதற்கு நிறைய விதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இதனை மாற்றும் வகையில் டிஜிட்டல் முறையின் மூலம் ஆதார் என் மற்றும் ரேஷன் அட்டை எண்ணை மட்டும் பயன்படுத்தும் வகையில் ரேஷன் பொருள்களைப் பெறலாம் என்ற தகவல்கள் வெளியானது.

ஆதார் எண்ணுடன் இணைக்க

மேலும், நேற்று அறிவிக்கப்பட்ட புதிய தகவலின் படி ஆதார் மற்றும் ரேஷன் அட்டை இரண்டையும் இணைப்பதற்கான அறிவிப்புகள் வெளிவந்தன. இதனையடுத்து, இந்த இரண்டு அட்டைகளையும் இணைப்பதற்கு வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை எவ்வாறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இணைக்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் இணைக்க வேண்டும்.


Representative Image.  ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..! ஜூன் 30 ஆம் தேதிக்குள் இது கட்டாயம் பண்ணிருக்கனும்…


டிஜிட்டல் முறை

மேலும், ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்குவதற்கு கை ரேகை முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முறையில் ஒரு சில விளைவுகள் இருப்பதால், இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.


Representative Image.  TATA Buys Ford Company: டாடா நிறுவனத்தின் வெற்றி…! அடுத்த டார்கெட் ஃபோர்டு ஆலை….!


புதிய அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி அவர்கள், ரேஷன் கார்டு அறிவிப்பைப் பற்றி முக்கிய தகவலை வெளியிட்டிருந்தார். அதன் படி, இனி ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்குவதற்குக் கை ரேகை விதிகளைப் பயன்படுத்துவதற்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பதிவின் அடிப்படையில் ரேஷன் கடையில் பொருள்கள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்