Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூலை.11ல் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு..! | Gst Council Meeting 2023

Saraswathi Updated:
ஜூலை.11ல் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு..! | Gst Council Meeting 2023Representative Image.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக்கூட்டம் அடுத்த மாதம் 11ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும்  சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்வதற்காகவும் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்துவருகிறது.

இந்த கவுன்சிலானது குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டப்பட்டு, வரி விதிப்பு முறையில் தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வருவது, பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பு முறையில் உள்ள பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து வணிகர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதில் ஆலோசிக்கப்படும்.

அந்த வகையில், ஜூலை மாதம் 11ம் தேதி  ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர்  நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்த 50-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநில நிதியமைச்சா்களும் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கவுன்சில் கூட்டத்தில், சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது, மல்டிபர்ப்பஸ் எனப்படும் பன்நோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறுஆய்வு செய்வது உள்ளிட்டவை தொடர்பாக  முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்