Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Success Story of Aadhar: ஆதார் அட்டையின் உதவியால் குடும்பத்துடன் இணைந்த பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Gowthami Subramani July 05, 2022 & 10:30 [IST]
Success Story of Aadhar: ஆதார் அட்டையின் உதவியால் குடும்பத்துடன் இணைந்த பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!Representative Image.

Success Story of Aadhar: ஆதார் அட்டையின் உதவி கொண்டு வீட்டை விட்டு பிரிந்த ஒரு பெண் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.

டிஜிட்டல் பயன்பாடு

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்ததே ஆதார் கார்டு திட்டமாகும். இந்த ஆதார் கார்டு இணைப்பின் மூலம், ஒவ்வொருவரின் அடையாளத்தையும் கொண்டிருப்பதாகும். இந்த டிஜிட்டல் முறையின் மூலம், ஒருவரின் ஆதார் அட்டையைக் கொண்டு அவர்களின் முழு விவரங்களையும் அறியலாம்.

ஆதார் அட்டையின் முக்கியத்துவம்

தற்போது, நாம் நாளடைவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு ஆதார் அட்டை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, பான் கார்டு, வங்கி, அடையாள அட்டை, ரேஷன் அட்டை என அனைத்திலும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதைக் கட்டாயமாக்கச் செய்ததின் மூலம், ஒருவரின் அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

ஆதாரின் வெற்றிக் கதை

ஆதாரின் உதவி கொண்டு நிறைய விதமான பல்வேறு பயன்பாடுகளைப் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது, ஆதாரின் வெற்றி வரிசையில் குறிப்பிட்ட இந்த நிகழ்வு ஒரு பெரும் ஆச்சரியத்தை அனைவருக்கும் அளித்துள்ளது. ஒர் பெண் தனது குடும்பத்தாருடன் ஆதார் எண்ணின் உதவி கொண்டு இணைந்தாராம்.

டிஜிட்டல் இந்தியா லீக் 2022

குஜராத்தின் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா லீக் 2022 வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், மோடி அவர்கள் இந்த உணர்ச்சிகரமான கதையைப் பகிர்ந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததை பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அந்த இளம்பெண் வேறொரு நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, ரயில் நிலையத்திலேயே தனது குடும்பத்தைப் பிரிந்து சென்றுள்ளார். அந்த பெண்ணை, தெரியாத நபர் ஒருவர் அனாதை இல்லத்திற்கு அனுப்பியுள்ளான். இரண்டு நாட்கள் மட்டும் இங்கே இருக்க வைப்பதாகக் கூறியுள்ளான்.

இளம்பெண்ணின் உருக்கம்

ஆனால், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அனாதை இல்லத்தில் வாழ்ந்து வந்ததாக அந்தப் பெண் கூறினாள். இந்த சமயத்தில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, உடனிருந்த பெண்கள் எல்லோரும் அவர்களின் உறவினர்களின் இருப்பிடங்களுக்குச் சென்றனர். ஆனால், இந்த பெண் செல்ல முடியாததால், அனாதை இல்லத்தின் லக்னோ கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆதார் உதவியுடன்

அந்த சமயத்தில் தான் ஆதார் அட்டை வழங்க அதிகாரிகள் வந்திருக்கின்றனர்.  உடனே சிறுமியிடம் ஆதார் அட்டை இருப்பதை அறிந்ததைக் கண்டறிந்தவர்கள், அந்த அட்டையில் உள்ள விவரங்களைப் பயன்படுத்தி, அவரது குடும்பத்தைக் கண்டறிந்து உதவினர். இரண்டு ஆண்டுகள் கழித்து, ஆதார் எண்ணின் உதவி கொண்டு ஒரு சிறுமி அவரது குடும்பத்துடன் இணைந்தது ஆதாரின் வெற்றி என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்