Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ரேஷன் கடைகளுக்கு பறந்த எச்சரிக்கை… இனிமே இத பண்ணக் கூடாது…

Gowthami Subramani September 22, 2022 & 11:05 [IST]
ரேஷன் கடைகளுக்கு பறந்த எச்சரிக்கை… இனிமே இத பண்ணக் கூடாது…Representative Image.

ரேஷன் கடைகளில் சோப்பு உள்ளிட்டவற்றை பயனாளர்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை, எண்ணெய், பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களுடன் சோப்பு, உப்பு போன்ற மற்ற பொருள்களையும் வாங்க வேண்டும் என ஊழியர்கள் பயனாளர்களைக் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பொதுமக்களை அவர்களது விருப்பமின்றி மற்ற பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. இதனையும் மீறி ஊழியர்கள் யாரையாவது கட்டாயப்படுத்தினால், அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்