Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நேரடி வரி வசூல் 24% அதிகரிப்பு.. 2022-23 நிதியாண்டின் முதல் பாதி வசூல்.. வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு..

Gowthami Subramani October 10, 2022 & 14:15 [IST]
நேரடி வரி வசூல் 24% அதிகரிப்பு..  2022-23 நிதியாண்டின் முதல் பாதி வசூல்.. வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு..Representative Image.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 2022 வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் 8.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே கால கட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த மொத்த வசூலை விட 23.8% உயர்வாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் அதாவது கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருவாய் மீதான மொத்த வரி வசூல் இதுவரை 24% ஆக உயர்ந்துள்ளதாக வரித்துறை கூறியுள்ளது.

அதாவது இந்த நிதியாண்டின் முதல் பாதியில் நேரடி வரி வசூல் 8.98 லட்சம் கோடியாக இருந்தது. கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்களின் வருமானத்தின் மீதான வரி நேரடி வரிகளை ஈடு செய்வதாக உள்ளது.

இதில், ரீஃபண்டுகள் சரி செய்த பின், ரூ.7.45 லட்சம் கோடியாக நேரடி வரி வசூல் இருந்தது. இது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே, இதே கால கட்டத்தில் இருந்த நிகர வசூலை விட 16.3% அதிகமாகும்.

அதன் படி, இந்த சேகரிப்பு 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 52.46% எனவும் வரித்துறை கூறியுள்ளது.

வரி வசூல்

வரி வசூல் என்பது பொதுவாக எந்தவொரு நாட்டிலும் உள்ள பொருளாதார நடவடிக்கைகளின் குறிகாட்டியாகும். இருப்பினும், இந்தியாவில் தொழில்துறைக்கான உற்பத்தியும், ஏற்றுமதியும் மந்த நிலையில் இருந்த போதும், வரி வசூல் வலுவானதாக இருந்தது.

இன்றும் சில ஆய்வாளர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை இழந்து விட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், கார்ப்பரேட்டின் வளர்ச்சி இதனை இயங்க வைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் இந்தியாவின் GDP-யின் வளர்ச்சியை, 7.2%-லிருந்து 7%-ஆக குறைத்துள்ளது.

மொத்த வருவாய் வசூல்

வருமான வரி

வளர்ச்சி விகிதம்

கார்ப்பரேட் வருமான வரி (சிஐடி) மற்றும் தனிநபர் வருமான வரி (பிஐடி)

16.73%

பிஐடியின் வளர்ச்சி விகிதம் (எஸ்டிடி உட்பட)

32.30%

 

ரிஃபண்டுக்குகளைச் சரிசெய்த பின், கார்ப்பரேட் வருமான வரி (சிஐடி) சேகரிப்பில் நிகர வளர்ச்சி 16.29% ஆனது. பிஐடி சேகரிப்பில் (பிஐடி மட்டும்) 17.35%, பிஐடி சேகரிப்பில் (எஸ்டிடி உட்பட பிஐடி) 16.25% ஆகவும் இருந்தது.

இந்த நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலான கால கட்டத்தில் ரூ.1.53 லட்சம் கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகாலத்தில் வழங்கப்பட்ட ரீஃபண்டுகளை விட 81% அதிகமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்