Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vedanta’s Sterlite Copper Plant: விற்பனைக்குத் தயாரான வேதாந்தாவின் ஸ்டெர்லைட் காப்பர் பிளேன்ட்…!

Gowthami Subramani June 20, 2022 & 14:30 [IST]
Vedanta’s Sterlite Copper Plant: விற்பனைக்குத் தயாரான வேதாந்தாவின் ஸ்டெர்லைட் காப்பர் பிளேன்ட்…!Representative Image.

Vedanta’s Sterlite Copper Plant: தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு உள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லை நிறுவனம் ஒன்று வேதாந்தா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. ஆனால், இதற்கு பொதுமக்களிடையே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. பெரும் அளவிற்கான போராட்டங்களும் எழுந்தன.

ஏலத்தில் ஸ்டெர்லைட் ஆலை

கடும் எதிர்ப்பிலும், தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்தும் நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடியில் இயங்கப்பட்ட சுரங்க நிறுவனமான வேதாந்தா, தற்போது விற்பனைக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிட்டலுடன் இணைந்து இதற்கான ஏலங்கள் அழைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான EoI-ஐ சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியும் (ஜூலை 4) அறிவிக்கப்பட்டுள்ளது (Vedanta’s Sterlite Copper Plant).

நிறுவனத்தின் தகவல்

இவ்வாறு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனைக்கு வரவிருக்கும் சூழ்நிலையில் அந்நிறுவனம் அதற்கான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் தாமிர உற்பத்தியில் 40 சதவீதம் உருக்காலைக் கொண்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட்க்கு வந்த எதிர்ப்புகளினால், இந்த நிறுவனம் மூடப்பட்ட நேரத்தில் நேரடியாக 5,000 பேர் மற்றும் மறைமுகமாக 25,000 பேர் பணிபுரிந்தனர் (Vedanta’s Sterlite Copper Plant EoI).

ஆலையின் திறன்

வேதாந்தா நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆலையில் திறனை ஆண்டுக்கு 4 லட்சம் டன்கள் என கணித்துள்ளது.

விற்பனைச் சலுகையில் குடியிருப்பு வீடுகள் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி வசதி போன்றவை அடங்கும். வேதாந்தாவின் இந்த தாமிர உருக்காலை நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக, இந்த நிறுவனத்தை மூடக்கோரி பல்வேறு போராட்டங்களை எதிர் கொண்டது.

மேல் முறையீடு

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் உள்ள உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இந்த ஸ்டெர்லை நிறுவனம் இருந்துள்ளது. இதனை எதிர்த்து வலுவான போராட்டங்கள் எழுந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் இந்த ஆலை மூடப்பட்டது (Is Sterlite is in Sale?).

அதனைத் தொடர்ந்து ஆலையை மூடுவதற்கான உத்தரவை எதிர்த்து, நிறுவனம் சட்டப்பூர்வமான வழியில் போராடியது. அதன் படி, ஆலையை மூடுவதற்கான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி வேதாந்த மேல்முறையீடு செய்துள்ளது. தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

விற்பனைக்கு வரும் நிலை

இந்த சூழ்நிலையில், நிறுவனம் ஆலையில் உள்ள மனித வளத்தைக் குறைத்துள்ளது. இந்த நிறுவனம் விற்பனைக்கு வந்ததைத் தொடர்ந்து, இதன் பங்கின் விலை திங்கட்கிழமையான இன்று அதாவது ஜூன் 20 ஆம் நாள் காலை 11.27 மணியளவில் 10 சதவீதம் சரிந்துள்ளது. அதன் படி, வேதாந்த நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.235 ஆக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்