Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Warren Buffet Lunch Auction: ஒரு வேளை சாப்பாடு ரூ. 148 கோடியா..? எதுக்கு இவ்வளவு விலையா இருக்கும்….!

Gowthami Subramani June 19, 2022 & 19:25 [IST]
Warren Buffet Lunch Auction: ஒரு வேளை சாப்பாடு ரூ. 148 கோடியா..? எதுக்கு இவ்வளவு விலையா இருக்கும்….!Representative Image.

Warren Buffet Lunch Auction: உலகின் மிகப்பெரிய பணக்காரரும், பங்குச்சந்தையின் தந்தையாகவும் போற்றப்படுபவர் வாரன் பஃபெட். இவருடன் ஒரு வேளை மதிய உணவு அருந்துவதற்காக ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கமாகும். இவ்வாறு ஏலத்திற்கு விடும் போது, இந்திய மதிப்பின் படி கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படியே, ஏலத்தின் மூலம் நடப்பு ஆண்டில் 19 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயின் 148 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏலத்தின் மூலம் உணவு அருந்துவதற்கு இவ்வளவு விலை கொடுத்து புக் செய்த நபர் யார் தெரியுமா..? மற்றும் எதற்காக இந்த ஏலம் விடப்படுகிறது என்பதைப் பற்றியும் இங்குப் பார்க்கலாம்.

தொண்டு நிறுவனங்களுக்காக

சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களுக்காக “கிளைட்” என்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு ஆண்டு தோறும் வாரன் பஃபெட் மூலம் ஏலம் நடத்தி வரப்படுகிறது. மேலும், இந்த தொண்டு நிறுவனத்துடன் வாரன் பஃபெட் 21 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.

ஏலத்தின் முக்கியத்துவம்

இவ்வாறு ஆண்டு தோறும் வாரன் பஃபெட் உடன் சாப்படுவதற்கு ஏலம் விடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கும் ஏழை மக்களுக்காக, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அடிப்ப்டையிலும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதற்கும் மனநிலை சரியில்லாத நபர்களுக்கான சிகிச்சையில் பங்களிக்கவும், இந்த ஏலம் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 8,000 மக்கள் வீடு இல்லாமல் தெருக்களில் இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் இப்படியொரு ஏலத்தினை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

விருந்தில் கலந்து கொள்ளும் நபர்

இவ்வாறு, நடப்பு நிதியாண்டில் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நியூயார்க்கினைச் சேர்ந்த ஸ்மித் மற்றும் வோலென்ஸ்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுடன் மொத்தம் 7 பேர் வரை இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஏலம் கிளைட் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. அதன் படி, கடந்த ஜூன் 12, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 25,000 டாலர்களுடன் ஆரம்ப விலை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஏலம் திங்கள்கிழமையன்று இந்த ஏலம் 2 மில்லியன் டாலரைத் தாண்டியது. இறுதியாக, இந்த ஏலத்தில் 19 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டது.

வரலாற்றில் உச்சத்தை அடைந்த ஏலத்தொகை

அதன் படி, கிரிப்டோகரன்சி தொழிலதிபராக விளங்கும் ஜஸ்டின் சன் 2019 ஆம் ஆண்டு 4.57 மில்லியன் டாலரை செலுத்தி ஏலத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2020 மற்றும் 21 ஆம் ஆண்டில் கொரோனா பேரிடரின் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஏலத்தில் தான் மிக அதிக அளவில் ஏலத்தொகை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலத்தின் மொத்த தொகை

அதன் படி, இந்த வெற்றிகரமான ஏலத்தின் மூலம் இது வரை 53 மில்லியன் டாலர்களை கிளைட் தொண்டு நிறுவனம் பெற்றுள்ளதாகவும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரக்கூடிய இந்தத் தொகையின் மதிப்பு இந்த ஆண்டு 19 மில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது போல் ஏலத்தில் பெறப்பட்ட தொகையினைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவுவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்