Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

ஊழியர்கள் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை..! ஒரே நேரத்தில் 300 ஊழியர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்த விப்ரோ..

Gowthami Subramani September 22, 2022 & 13:40 [IST]
ஊழியர்கள் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை..! ஒரே நேரத்தில் 300 ஊழியர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்த விப்ரோ..Representative Image.

ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த 300 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது விப்ரோ நிறுவனம்.

பல முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோ நிறுவனம், கடந்த சில நாள்களுக்கு முன்பு மூன் லைட்டிங் கூடாது என ஊழியர்களை எச்சரித்துள்ளது. அதாவது, மூன்லைட்டிங் என்பதுச் முழு நேர ஊழியராக பணிபுரிந்த படி, ஓய்வு நேரத்தில் இன்னொரு பணியை மேற்கொண்டு வருமானம் ஈடுவதாகும்.

கொரோனா காலத்தில் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வ்னஹ்து கொண்டிருந்தனர். இதனால், பலர் தங்களுடைய அலுவலகப் பணிகளை முடித்து விட்டு, மீதம் இருந்த நேரத்தில் வேறு பணிகளைச் செய்து கூடுதல் வருவாய் பெற்று வந்தனர்.

கொரோனா முடிந்த பின், மீண்டும் நிறுவனங்கள் நேரடியாக ஆரம்பித்தது. அதன் பின், மூன்லைட்டிங் கூடாது என சில நிறுவனங்கள் கூறியுள்ளன. அதே போல, இன்னும் சில நிறுவனங்கள் மூன் லைட்டிங்கிற்கு அனுமதி வழங்கியும் உள்ளது.

இது குறித்து, இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் கடந்த சில நாள்களுக்கு முன்பு மூன்லைட்டிங் கூடாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இது இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விப்ரோ நிறுவனமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்லைட்டிங் கூடாது என ஊழியர்களை எச்சரித்துள்ளது. இருப்பினும், ஊழியர்கள் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை. இதனால், தங்களுடைய நிறுவனத்தில் இருந்து ஒரே நேரத்தில் தங்களின் போட்டி நிறுவனத்திற்கும் வேலை செய்த 300 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து, விப்ரோ தலைவரான ரிஷாத் பிரேம்ஜி கூறியதாவது, “விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் சில வீரர்கள், எங்களது போட்டி நிறுவனத்திற்கும் வேலை செய்கிறார்கள். அதன் படி, கடந்த சில மாதங்களில் இவ்வாறு வேலை பார்க்கும் ஊழியர்களை கண்டுபிடித்துள்ளோம். அவர்களைப் பணி நீக்கம் செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

விப்ரோ நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையால், இரண்டு நிறுவனங்களில் ஒரே நேரத்தில் பணிபுரியும் சில ஊழியர்கள் வேலை குறித்து அச்சத்தில் உள்ள்தாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்