Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Corona Cases Today: ஒரேநேரத்தில் 64 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

Nandhinipriya Ganeshan May 09, 2022 & 10:22 [IST]
Corona Cases Today: ஒரேநேரத்தில் 64 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி...Representative Image.

Corona Cases Today: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று இந்தியாவில் 3451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24, 064 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 57,495ஆக உயர்ந்துள்ளது. அத்துடன்  இந்தியாவில்  இதுவரை 190.20 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஒரேநாளில் 64 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயக்கடா மாவட்டத்தில் கோட்லகுடா என்ற  பகுதியில் இயங்கி வந்த 2 பள்ளி மாணவர் தங்கும் விடுதியில் இருக்கும் 257 மாணாக்கர்களுக்கு சுகாதாரத்துறையினர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் 64 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   இவர்களில் யாருக்கும் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக 64 மாணவர்களையும் தனிமைப்படுத்திய ஒடிசா சுகாதார பணியாளர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்