Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பொறியில் கல்லூரியில் பாடப்பிரிவில் மாற்றம்...அண்ணா பல்கலைகழகத்தின் அதிரடி அறிவிப்பு!

Priyanka Hochumin Updated:
பொறியில் கல்லூரியில் பாடப்பிரிவில் மாற்றம்...அண்ணா பல்கலைகழகத்தின் அதிரடி அறிவிப்பு!Representative Image.

வரும் கல்வி ஆண்டில் 6 பாடப்பிரிவில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியில் கல்லூரியில் இதுவரை இருந்த இடங்களின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பாடப்பிரிவில் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 6 பாடப்பிரிவில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சிவில் பாடப்பிரிவில் 1,110 இடங்களும், மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 1,836 இடங்களும், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் 360 இடங்களும், இ.சி.இ. பாடப்பிரிவில் 390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 1,800 இடங்கள், ஐ.டி. பிரிவில் 2,280 இடங்கள், ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் 2,520 இடங்கள், சைபர் செக்யூரிட்டி பிரிவில் 1,200 இடங்கள், ஏ.ஐ. மிஷின் லேர்னிங் பிரிவில் 690 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 6 பாடப்பிரிவுகளில் 9,750 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 4 பாடப்பிரிவுகளில் 3,696 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்