Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

போட்டித் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள்…!

Gowthami Subramani November 18, 2022 & 18:45 [IST]
போட்டித் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள்…!Representative Image.

அரசு, தனியார் துறையில் பணி செய்ய விரும்பும் நபர்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படும். அதில், படித்த பிரிவுகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அது மட்டுமல்லாமல், திறனை சோதிக்க பல்வேறு பொது வினாக்களும் கேட்கப்படும். இந்தப் பதிவில் பொதுவினாக்கள் சிலவற்றைக் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நேரம் மற்றும் வேலை தொடர்பான கேள்விகள் மற்றும் அதற்கான விடைகளை இங்குக் காண்போம்.

A, B இருவரும் ஒரு வேலையை 18 நாட்களில் செய்து முடிப்பர்; B, C அதே வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பர்; C, A அதே வேலையை 36 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

அ) 16                                                  ஆ) 12

இ) 26                                                  ஈ) 13

விடை: அ) 16

ஒரு மகிழுந்து (கார்) சராசரியாக ஒரு மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்கிறது, 12 நிமிடத்தில் அது கடக்கும் தொலைவு என்ன?

அ) 12 கி.மீ                                         ஆ) 10 கி.மீ

இ) 8 கி.மீ                                           ஈ) 5 கி.மீ

விடை: ஆ) 10 கி.மீ

ஒரு கார் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்கிறது. ஒரு வினாடியில் அது எவ்வளவு தூரத்தை கடக்கும்?

அ) 27.8 மீ                                           ஆ) 26.2 மீ

இ) 28.7 மீ                                           ஈ) 25.2 மீ

விடை: அ) 27.8 மீ

12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில் 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை?

அ) 11                                                  ஆ) 8

இ) 12                                                  ஈ) 10

விடை: ஈ) 10

A என்பவர் ஒரு வேலையின்  பகுதியை 20 நாட்களில் செய்து முடித்தால் அதே வேலையின்  பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை

அ) 10                                                  ஆ) 30

இ) 60                                                  ஈ) 20

விடை: இ) 60

ஒரு வேலையை 12 ஆண்களும், 16 பெண்களும் 5 நாட்களிலும், அதே வேலையை 13 ஆண்களும் 24 பெண்களும் 4 நாட்களில் செய்து முடிக்கிறார்கள் எனில் ஒரு நாளில் செய்யக் கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேலையின் விகிதம்

அ) 4:5                                                 ஆ) 2:1

இ) 2:3                                                 ஈ) 3:1

விடை: ஆ) 2:1

54 கி.மீ / ம வேகமானது கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமம்?

அ) 21 மீ/வி                                        ஆ) 13.5 மீ.வி

இ) 27 மீ/வி                                        ஈ) 15 மீ.வி

விடை: ஈ) 15 மீ.வி

ஒரு வேலையை A என்பவர் 12 நாட்களிலும் B என்பவர் Aயைக் காட்டிலும் 60% அதிக திறன் கொண்டவர் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?

அ) 9 நாள்கள்                                   ஆ) 8 நாள்கள்

இ) 7 நாள்கள்                                   ஈ) 6 நாள்கள்

விடை: இ) 7 நாள்கள்

140 பேர் ஒரு வேலையை 11 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 110 பேர் எத்தனை நாட்களில் முடிப்பர்?

அ) 13 நாள்கள்                                 ஆ) 12 நாள்கள்

இ) 14 நாள்கள்                                 ஈ) 15 நாள்கள்

விடை: இ) 14 நாள்கள்

220 மீட்டர் நீளமுள்ள தொடர் வண்டியானது 60 கி.மீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது, 460 மீட்டர் நீளமுள்ள நடைமேடையை கடப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?

அ) 38.7 வினாடி                               ஆ) 40.8 வினாடி

இ) 41.5 வினாடி                               ஈ) 42.4 வினாடி

விடை: ஆ) 40.8 வினாடி

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்