Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aptitude Questions with Answers in Tamil: தகுதித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்…! இது எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க....

Gowthami Subramani June 15, 2022 & 18:40 [IST]
Aptitude Questions with Answers in Tamil: தகுதித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்…! இது எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க....Representative Image.

Aptitude Questions with Answers in Tamil: மாணவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு அவர்களுக்கு நடத்தப்படும் தேர்வே தகுதித் தேர்வு எனப்படுகிறது. அந்த வகையில், ஏராளக்கணக்கான வகையில் தகுதித் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில், இப்போது நம்பர் தொடரினை மையாகக் கொண்டு கேட்கப்படும் கேள்விகளையும், அதற்கான விடையையும் காணலாம்.

58, 52, 46, 40, 34, ... இந்தத் தொடரில் அடுத்து என்ன எண் வர வேண்டும் என்பதைக் கண்டறியலாம்.

அ) 26                          ஆ) 36                                     இ)28                           ஈ) 22

விடை: இ) 28

இந்தத் தொடர் ஒரு எளிய கழித்தல் தொடர். இதில், வரிசையாக உள்ள எண்களில் அடுத்தடுத்து வரும் எண் முந்தைய எண்ணை விட 6 குறைவாகக் கொண்டுள்ளது.

31, 29, 24, 22, 17, ... இந்தத் தொடரில் அடுத்த எண் என்பதைக் காண்க.

அ) 12                          ஆ) 13                                     இ)14                           ஈ) 15

விடை: ஈ) 15

இதில் மாற்றுக் கழித்தல் தொடர் அடங்கியுள்ளது. அதன் படி, இந்தத் தொடரில் முதலில் 2 ஆல் கழிக்கப்பட்டு அடுத்து 5-ஆல் கழிக்கப்பட்டுள்ளது.

8, 22, 8, 28, 8, ... இதில் அடுத்த எண் என்ன வரும்..?

அ) 32                          ஆ) 29                                     இ)34                           ஈ) 9

விடை: இ) 34

இந்தத் தொடர் ஒரு சீரற்ற எண் ஆகும். இதில், 8 என்ற எண்ணிற்கு அடுத்த படியாக வரும் போது அடுத்த எண்ணில் 6 கூட்டப்பட்டு வருகிறது.

14, 28, 20, 40, 32, 64, ... இந்தத் தொடரில் வரும் அடுத்த எண்?

அ) 128                                    ஆ) 96                                     இ)52                           ஈ) 56

விடை: ஈ) 56

இது ஒரு மாற்று பெருக்கல் மற்றும் கழித்தல் தொடர். இதில், முதலில் 2 ஆல் பெருக்கி அதிலிருந்து 8 ஐக் கழிக்கவும்.

544, 509, 474, 439, ... இந்தத் தொடரில் உள்ள அடுத்த எண்ணைக் காண்க.

அ) 445                                    ஆ) 414                                   இ)404                         ஈ) 420

விடை: இ) 404

இது கழித்தல் தொடர் ஆகும். ஒவ்வொரு எண்ணும் அதன் முந்தைய எண்ணை விட 35 குறைந்து கொண்டு வருகிறது.

1.5, 2.3, 3.1, 3.9, ... இதில் வரும் அடுத்த எண்

அ) 4.4                         ஆ) 5.1                        இ) 4.2                         ஈ) 4.7

விடை: ஈ) 4.7

இது எளிய கூட்டல் தொடர். இதில் ஒவ்வொரு எண்ணும் 0.8 அதிகரிக்கிறது.

2, 6, 18, 54, ... இந்தத் தொடரில் அடுத்த எண் யாது?

அ) 162                                    ஆ) 108                       இ) 216                         ஈ) 148

விடை: அ) 162

இந்தத் தொடரில் ஒவ்வொரு எண்ணும் அதற்கு முந்தைய எண்ணை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

201, 202, 204, 207, ... இந்தத் தொடரில் வரும் அடுத்த எண்

அ) 208                                    ஆ) 205                       இ) 211                         ஈ) 210

விடை: இ) 211

இந்தக் கூட்டத்தொடரில் முதல் எண்ணுடன் 1, இரண்டாம் எண்ணுடன் இரண்டு, மூன்றாம் எண்ணுடன் 3 என தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது.

14, 28, 20, 40, 32, 64, ... இந்தத் தொடரில் அடுத்து எந்த எண் வர வேண்டும்?

அ) 56                                      ஆ) 52                         இ) 128                         ஈ) 96

விடை: அ) 56

இதில், முதல் எண்ணை 2 ஆல் பெருக்கினால் வரும் எண்ணை பின்னர் 8 ஐக் கழிக்க வேண்டும்.

53, 53, 40, 40, 27, 27, ... என்ற தொடரில் அடுத்து என்ன எண் வரும்?

அ) 53                                      ஆ) 27                         இ) 12                          ஈ) 14

விடை: இ) 14

இந்தத் தொடரில் ஒவ்வொரு எண்ணும் இரண்டு முறை வரும். அடுத்த எண்ணுக்கு வர 13 ஆல் கழிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்