Mon ,May 27, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Today Current Affairs in Tamil: இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்…! தெரிந்து கொள்ளுங்கள்… போட்டித் தேர்வுக்குத் தயாராகுங்கள்….!

Gowthami Subramani June 13, 2022 & 19:15 [IST]
Today Current Affairs in Tamil: இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்…! தெரிந்து கொள்ளுங்கள்… போட்டித் தேர்வுக்குத் தயாராகுங்கள்….!Representative Image.

Today Current Affairs in Tamil: மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகளில் நடப்பு நிகழ்வுக்கான அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொண்டிருப்பது மிக அவசியம். அந்த வகையில், இன்றைய (ஜூன் 13) நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றிக் காண்போம் (Current Affair June Month 2022).

கிராம தன்னாட்சியில் (Village Atonomy) இந்தியா புதிய மைல்கல்

இந்தியாவில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான கிராம உள்ளாட்சிகள் உள்ளன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நாட்டில் சுமார் 69 சதவீத மக்கள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயக ரீதியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கிராம தன்னாட்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் (TNPSC Current Affairs 2022).

தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2014. இந்த திட்டம், இதற்கு முன்னரே 2009 ஆம் ஆண்டு நிர்மல் பாரத் அபியான் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு ஸ்விட்ச் பாரத் என்ற திட்டமாக மாற்றியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்.. திமுக ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தல் ராஜ்யசபா செயலர் கண்காணிப்பில் நடத்தப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொருத்தவரை, தனது கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பிக்க முடியாது. அதாவது, ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென உறுப்பினர்களுக்குக் கட்டளையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. (கொறடா – WHIP)

உலகளாவிய பொருளாதார கட்டமைப்பை இந்தியாவில் வடிவமைக்க முடியும்

இந்த உரையைக் கூறியவர் மத்திய நிதித்துறைச் செயலர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார் (Current Affairs Today).

இந்தியா சர்வதேச சூரியசக்திக் கூட்டணிக்குத் (International Solar Alliances) தலைமை ஏற்று செயல்படுகிறது. மேலும், யுபிஐ எனப்படும் வங்கிகளுக்கான அடையாள எண் வழங்கும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை, பொது செலவினங்களின் தரம், மானிய சீர்திருத்தம் உள்ளிட்ட உள்நாட்டு சவால்களைச் சரி செய்தல் அவசியமாகும் (TNPSC Current Affairs June 2022).

மின் தேவை அதிகரிப்பு

கடந்த ஓராண்டில் இந்தியாவின் மின் தேவை 45,000 மெகாவாட் அதிகரித்துள்ளது என மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார் (Current Affairs for Competitive Exams).

தேசிய அரசு இணைய சேவை (e-Commerce)

மத்திய அரசின் தேசிய அரசு இணைய சேவை மதிப்பீட்டில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.

அதன் படி, கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகச் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது (Current Affairs June 13 2022).

தமிழ்நாடு அரசின் சேவை வலைதளங்களில் அனைத்து அம்சங்களிலும் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தரநிலையைப் பூர்த்தி செய்துள்ளன. அந்த வரிசையில் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன. இது தவிர ஆந்திரம், கேரளா, பஞ்சாப், கோவா, ஒடிஸா அரசுகளின் சேவை வலைதலங்கள் 100 சதவீதம் தர நிலையை மேம்படுத்தியுள்ளது.

இந்த மதிப்பீட்டில் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. வட கிழக்கு வரிசையில் மேகாலயம், நாகலாந்து போன்றவை முன்னணியில் உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்