Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Current Affairs 2022 in Tamil: ஜூலை 01, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்

Gowthami Subramani [IST]
Current Affairs 2022 in Tamil: ஜூலை 01, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்Representative Image.

Current Affairs 2022 in Tamil: ஜூலை மாதத்தில் முதல் நாளான இன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர மாநில முதல்வர் தாக்கரே பதவி விலகினார். தற்போது ஏக்னாத் ஷிண்டே புதிய முதல்வராக பதவி ஏற்றியிருக்கிறார். துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவி வகித்துள்ளார்.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53. இது சிங்கப்பூரின் டிஎஸ்-இஒ உள்பட 3 வணிகப்பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி -சி53 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

இது தவிர, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடிய சிங்கப்பூரின் நியூசர் செயற்கைக் கோளும் நிலை நிறுத்தப்பட்டது. இது அனைத்து பருவநிலையிலும், தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக் கூடியது. இதனுடன் கல்வி சார் பணிக்காக, சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக் கோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிஎஸ்எல்வி வரலாற்றில் முதல் முறையாக, செயற்கோள்களை விடுவித்த பிறகு, பயன்பாடற்று இருக்கும். ராக்கெட்டின் நான்காம் நிலையையும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்த இம்முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டின் இறுதி பாகமான பிஎஸ் 4 பகுதியில் ஆறு ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

சிறு, குறு, நடுத்தர தொழிலில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

ககன்யான், சந்திராயன் திட்டம் எப்போது?

இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்

பிஎஸ்எல்வி-சி53 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அடுத்தகட்டமாக, எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் ஜூலை மாதத்தின் இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து, ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் வணிக ரீதியாக முன்னெடுக்கப்பட உள்ளது. அவ்வாறு, இந்திய ஆய்வுப் பணிகளுக்கான ஜிஎஸ்எல்வி செப்டம்பர் மாதத்திலும், வணிக ரீதியான ஜிஎஸ்எல்வி மேக் 3 திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் முன்னடுக்கப்பட உள்ளன.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. அதன் படி, ராக்கெட்டில் ஆபத்து காலத்தில் வெளியேறுவதற்கான வசதிகளை அமைப்பது குறித்த பல்வேறு கட்ட ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டிலும், அடுத்து வரும் ஆண்டுகளிலும் இவை தொடர்ந்து நடைபெறும்.

இதே போன்று, சந்திராயன்-3 திட்டமும் ஆய்வு நிலையில் உள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனைகளை சீராக்க வேண்டியுள்ளது. இது போன்ற காரணங்களால், ககன்யான் மற்றும் சந்திராயன் திட்டங்கள் தாமதமாகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்