Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விடுதலை போராட்டத்தின் பிதாமகர்.. திலகர் பிறந்த தினம் இன்று!!

Sekar July 23, 2022 & 11:31 [IST]
விடுதலை போராட்டத்தின் பிதாமகர்.. திலகர் பிறந்த தினம் இன்று!!Representative Image.

உலகை ரட்சிக்க வந்தவர் எனும் அர்த்தத்துடன் கூடிய லோகமான்யர் எனும் பட்டத்தை பெற்ற இந்திய சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் பிறந்த நாள் இன்று.

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல தலைவர்களில் பால கங்காதர திலகரும் முதண்மையானவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். காந்தி சுதந்திர போராட்ட களத்திற்குல் நுழைவதற்கு முன்பு, இந்திய தேசிய காங்கிரசில் அமைதியாக போராடும் மிதவாதிகள், புரட்சியின் மூலமே சுதந்திரத்தை அடைய முடியும் எனும் கருத்தைக் ஒண்ட பிரட்சிக்கரவாதிகள் என இரு பெரும் பிரிவுகள் இருந்தன. இதில் புரட்சிகரவாதிகளின் தலைவராக திலகரே முன்னணியில் இருந்தார்.

இரு பிரிவும் தேர்ந்தெடுத்த பாதை வேறென்றாலும் நோக்கம் ஒன்று தான். புரட்சிகர கருத்துகளை கொண்ட திலகரின் பின்னால் அன்றைய இளைஞர் கூட்டம் ஆர்வமுடன் சுதந்திர போராட்டத்தில் களமாடியது. நமது மகாகவி பாரதியாரும் திலகரின் ஆதரவாளர் தான். அவரின் பிறந்தநாளான இன்று அவரது வரலாற்றை அறிவோம்.

திலகர் பிறப்பு 

பாலா கங்காதர திலகர் 1856 ஜூலை 23'ல் மகாராஷ்டிராவில் கங்காதரராவ், பார்வதிபாய் தம்பதியினரின் மூத்த மகனாக பிறந்தார். பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் கேசவராவ். சிறுவயதில் தந்தையிடமே கணிதமும், சமஸ்கிருதமும் கற்றார்.

பின்னர் புனேயில் உள்ள சிட்டி ஸ்கூலில் படித்தார். திலகருக்குப் பத்து வயதான போது தாய் காலமானார். 16 வயதில் தந்தையையும் இழந்தார். பதினான்கு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பூனா டெக்கான் கல்லூரியில் பி.ஏ படித்த அவர் பின்னர் சட்டம் பயின்று 1879 ல் எல்.எல்.பி (சட்டப்படிப்பு) முடித்து வழக்கறிஞரானார். 

இளமையிலேயே பல புரட்சிகர சிந்தனை கொண்ட அவர் வரதட்சணை ஒழிப்பில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். பெண் வீட்டார் தனக்கு வரதட்சணை கொடுக்க முன் வந்த போது அதை ஏற்க மறுத்து அனைவருக்கும் முன்னுதாரணமாக தாமே இருந்தார்.

புரட்சிகர சிந்தனை கொண்டிருந்தாலும், இந்திய கலாச்சாரத்தின் மீது பேராவல் கொண்டிருந்தார். இதனால் தலைப்பாகை, அங்கவஸ்திரம், செருப்பு என்று மரபுப் படிதான் உடையணிந்து வந்தார். 

இலக்கியம் மீது ஆர்வம் 

இலக்கியங்களில் தீரா வேட்கை கொண்ட திலகர், வேர்ட்ஸ்வொர்த், வால்டேர், ரூசோ போன்ற பன்னாட்டு அறிஞர்களின் நூல்களை விரும்பி படிப்பார். மேலும் சிறையிலிருக்கும் கீதா ரகசியம் என்கிற தலைப்பில் பகவத் கீதைக்கு விளக்க நூல் ஒன்றையும் எழுதினார்.

மராட்டா என்ற பெயரில் ஒரு ஆங்கில பத்திரிகையையும், கேசரி என்ற பெயரில் ஒரு மராட்டிய மொழி பத்திரிகையையும் அவர் நடத்தினார். அந்த இரு செய்தித்தாள்களிலும் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக் கருத்துக்களை வெளியிட்டு மக்களுக்கு சுதந்திர எழுச்சியை ஊட்டினார்.

பாரதத் தாயின் சுதந்திரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அவர், பத்திரிக்கையில் வெளியிட்ட காரசாரமான செய்திகளுக்காக அன்றைய பிரிட்டிஷ் அரசு அவருக்கு சிறை தண்டனை வழங்கியது. ஆனால் எதுவும் அவரை பின்வாங்கச் செய்யவில்லை. இன்னும் உறுதியுடன் சுதந்திரத்திற்காக போராடினார்  

அரசியல் வாழ்க்கை 

பத்திரிக்கையில் அரசைத் தாக்கி, எழுதியதற்காக சிறை சென்று திரும்பிய பின்னர், திலகர் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் சிறந்த பேச்சாளர் என்பதால் நரம்பு தெறிக்க பேசும் அவரது ஆவேச உரையைக் கேட்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். 

திலகரின் உரையால் கிளர்ந்து எழுந்த மக்களால் நாடு முழுவதும் பல இடங்களில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கலகம் வெடித்தது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மீண்டும் சிறையிலடைத்தது பிரிட்டிஷ் அரசு.

ஆனால் திலகருக்கு ஆதரவாக நாட்டு மக்கள் கொதித்து எழுவார்கள் என அஞ்சிய ஆங்கிலேய அரசு ஆறு ஆண்டுகளில் மீண்டும் விடுதலை செய்தது. 

கல்விக்கு முக்கியத்துவம் 

அந்நியரை வெளியேற்ற நமது மக்கள் கல்வியறிவு பெறுவது முதற்கண் அவசியம் என்று உணர்ந்த திலகர், ஆங்கில அறிவு இருந்தால்தான் உலக அரசியலை நம் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று நம்பினார்.

இதற்காக நியூ இங்கிலீஷ் ஸ்கூல் என்ற கல்விக் கூடத்தை உருவாக்கினார். இது பின்னர் கல்லூரியாய் மாறியது. தற்போதும் அது புனேயில் பெர்கியூசன் கல்லூரியாக செயல்படுகிறது.

பால கங்காதர திலகர் மரணம் 

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என மக்கள் மனதில் சுதந்திர தீ கொழுந்துவிட்டு எரியச் செய்த அந்த மகத்தான தலைவர், 1920 ஆகஸ்டு 1 ஆம் நாள் காலமானார். நாடு சுதந்திரமடைந்ததை தம்முடைய வாழ்நாளில் அவர் பார்க்கவில்லை என்றாலும் அவர் கண்ட கனவு நனவாகி இருக்கிறது.

தற்போது சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், அந்த மகத்தான மனிதரின் சாதனையை அனைவரும் நினைவு கூர்வோம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்