Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான சேர்க்கை.! ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது.? | RTE Tamil nadu Admission 2023-24

Gowthami Subramani Updated:
தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான சேர்க்கை.! ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது.? | RTE Tamil nadu Admission 2023-24 Representative Image.

தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் இயங்கக் கூடிய சுயநிதி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை, தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான சேர்க்கை.! ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது.? | RTE Tamil nadu Admission 2023-24 Representative Image

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களைப் பற்றி காணலாம்.
 

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான சேர்க்கை.! ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது.? | RTE Tamil nadu Admission 2023-24 Representative Image

விண்ணப்பிக்க வேண்டிய தேதி

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள்: மார்ச் 20, 2023

விண்ணப்பம் முடிவடையும் நாள்: ஏப்ரல் 20, 2023

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://rte.tnschools.gov.in

இந்த அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம், தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான சேர்க்கை.! ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது.? | RTE Tamil nadu Admission 2023-24 Representative Image

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 25% இலவச சேர்க்கைக்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசு விடுவிக்கவில்லை என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புத் தலைவர் ஆறுமுகம் அவர்கள் தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆனால், அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தயாராக் வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணத்தை விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்