Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

CUET PG Entrance Exam Date: மாணவர்களே..! உங்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு…! நுழைவுத் தேர்வுக்கான அப்டேட்…

Gowthami Subramani May 20, 2022 & 15:00 [IST]
CUET PG Entrance Exam Date: மாணவர்களே..! உங்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு…! நுழைவுத் தேர்வுக்கான அப்டேட்…Representative Image.

CUET PG Entrance Exam Date: தேசிய தேர்வு முகமை, முதுகலைப் பட்டப்படிப்புகள் சேர்வதற்கு நடத்தப்படும் CUET தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

M.A., M.Com., MBA., M.Sc. உள்ளிட்ட முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான பொதுநுழைவுத்தேர்வு CUET ஆகும். அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், JNU உள்ளிட்ட 42 மத்திய பல்கலைக்கழங்களில் நுழைவுத் தேர்வு நடத்துவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது (CUET PG).

வரும் கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்ப்படுகின்றன (CUET PG Entrance Exam).

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்: மே 19, 2022

விண்ணப்பம் முடிவடையும் நாள்: ஜூன் 18, 2022

இந்த CUET பொதுநுழைவுத் தேர்வு எழுதும் நபர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://cuet.nta.nic.in/

நாடு முழுவதும் இருக்கும் 42 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் நடத்தப்படும் முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது (CUET PG Exam Result 2022).

இதுவரை மத்திய பல்கலைக் கழகங்கள், மாணவர்களின் முதுகலைப் பட்டப்படிப்புக்கு தனித் தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன. இந்த முறை, ஒரே நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்பட உள்ளது. CUET – இளங்கலைப் பட்டப்படிப்புக்கு நடைபெற்ற தேர்வைப் போல, முதுகலைப் பட்டப்படிப்புக்கான தேர்வும் கணினி அடிப்படையிலான தேர்வாக நடைபெறும். மேலும், CUET PG-க்கான தேர்வுக்கான பதிவு ஜூன் மாதம் 18 ஆம் நாள் நடைபெறும் வேளையில், தேர்வு ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது (CUET PG Entrance Exam Date 2022).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்