Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 6 மற்றும் 7 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 12, 2022 & 16:10 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 6 மற்றும் 7 – இன்றைய நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: இந்த ஆகஸ்ட் மாதத்தின் 6 மற்றும் 7 ஆம் நாள்களுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

செயற்கைக் கோள்

75 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் உருவாக்கப்பட்ட இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் பெயர்?

விடை: ஆசாதிசாட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ISRO ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து, சிறு செயற்கைக் கோள் ஏவுகலத்தை விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 75 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவைக் குறிக்கும் வகையில், விண்வெளியில் பறக்க விடப்படும் மூவர்ணக் கொடியை இந்த ஏவுகலம் சுமந்து செல்லும். மேலும், இது EOS-02 என்ற உள்நாட்டில் உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் கியூப்சாட் ஆசாதிசாட் ஆகியவற்றைக் கொண்டு செல்கிறது. மேலும், இது இந்தியாவின் கிராமப்புறங்களில் இருக்கும் 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக் கோளில் தேசிய கீதத்துடன் ஒரு சிறப்புப் பாடலும் இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இராணுவ பயிற்சி

தைவானைச் சுற்றி மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை நடத்திய நாடு?

விடை: சீனா

சீனா, தைவானைச் சுற்றி மிகப் பெரிய இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. அப்போது, சீனாவால் எறிகணைகள் ஏவப்பட்டு, போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்குப் பதிலடியாக இது நடத்தப்பட்டதாகும். மேலும், தைவானுக்கு சென்ற முதல் அமெரிக்க உயர் அதிகாரியும் இந்த பெலோசி ஆவார். இந்தப் பயிற்சிகள், விமானத் தகவல் பகுதி வழியாகச் செல்லக் கூடிய 18 பன்னாட்டு வழித்தடங்களை சீர்குலைக்கும் என தைவான் அமைச்சரவை கூறியது.

வருமான வரி நாள்

இந்தியாவில் வருமான வரி நாள் கொண்டாடப்படும் நாள் எது?

விடை: ஜூலை 24

ஆண்டு தோறும் வருமான வரி அறிமுகப்பட்டதை நினைவு கூறும் விதமாக, வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் நாள் வருமான வரி நாளாக அனுசரிக்கிறது. 1857 ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போரின் போது, ஆங்கிலேய ஆட்சியால் இழப்புகள் ஏற்பட்டது. இது 1860 ஆம் ஆண்டு ஜூலஒ 24 ஆம் நாள் சர் ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் முதன் முறையாக வருமான வரியை அறிமுகப்படுத்தினார். அதன் படி, இந்தியாவில் வருமான வரி விதித்து, 2010 ஆம் ஆண்டுடன் 150 ஆண்டுகள் ஆனது. இதனைக் குறிக்கும் வகையிலே, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக வருமான வரி நாள் கொண்டாடப்பட்டது.

ரெப்போ விகிதம்

ஆகஸ்ட் 2022 பணவியல் கொள்கைக்குழு கூட்டத்திற்குப் பிறகு இருந்த ரெப்போ விகிதம் எவ்வளவு?

விடை: 5.4%

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான பணவியல் கொள்கைக்குழு ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளாக உயர்த்தி 5.40% ஆக உயர்த்தியுள்ளது. இதற்கான காரணம், நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கமே எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பின், ரெப்போ விகிதம் கொரோனா தொற்று நோய்க்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததை விட 5.15%-ற்கும் மேல் உள்ளது.

இந்திய பெண்கள் வாள்சண்டை போட்டி

“முதலாவது கேலோ இந்திய பெண்கள் வாள்சண்டை லீக்” போட்டி நடைபெறும் இடம்?

விடை: புதுதில்லி

சமீபத்தில், முதலாவது, கேலோ இந்திய பெண்கள் வாள்சண்டை லீக் போட்டி புது தில்லியின் தல்கடோரா உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. தேசிய அளவிலான பெண்களுக்கான வாள்வீச்சுப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வில், 20 மாநிலங்களின் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கின்றனர். இதில், டோக்கியோ ஒலிம்பியன் மற்றும் இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் தடகள வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்