Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Current Affairs in Tamil: ஜூன் 30, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வு….!

Gowthami Subramani [IST]
Today Current Affairs in Tamil: ஜூன் 30, 2022 –  இன்றைக்கான நடப்பு நிகழ்வு….!Representative Image.

Today Current Affairs in Tamil: இன்றைக்கான (ஜூன் 30, 2022) நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் ராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், “சட்டப்பேரவையில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. முதல்வர் பதவியையும், சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை” என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில முதல்வரான உத்தர் ராஜினாமா செய்த சமயத்தில் ஆளுநராக இருந்தவர் பகத் சிங் கோஷியார் ஆவார்.

உத்தவ் தாக்கரே ராஜினாமாவைத் தொடர்ந்து தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த தேவேந்திர ஃபட்னவீஸ் பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரும் ஆவார்.

ஆகஸ்ட் 6-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

வேட்பு மனு தாக்கல் தேதி – ஜூலை 5

கடைசி தேதி – ஜூலை 19

பரிசீலனை செய்யப்படும் நாள் – ஜூலை 20

வாபஸ் பெறுவதற்கான நாள் – ஜூலை 22

2022 ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் நாள் – ஆகஸ்ட் 6

தேர்தல் முடிவு வெளியிடப்படும் நாள் – ஆகஸ்ட் 6

இந்த தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் உள்ளிட்டோர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன், குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

2022 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே அதிக வாக்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்ட இரு அவைகளிலும் மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிப்பு வெளிப்படையாக நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் யாருக்கும் வாக்குச் சீட்டைக் காட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி ராக்கெட் லான்ச்

இன்று ஜூன் 30 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

சிங்கப்பூரின் டி.எஸ்-இஒ, நியூசர் உள்பட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூன் 30 மாலை 6 மணிக்கு ஏவப்படுகிறது.

இதனுடன் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக் கோளும் விண்ணில் ஏவப்படுகிறது.

இது 2.8 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும்.

அடுத்த ஜிஎஸ்டி கூட்டம்

48 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் தமிழ்நாட்டில் மதுரையில் நடைபெற உள்ளது. அதன் படி, இது தமிழக நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் அழைப்பிதலின் பேரின், அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதற்கு ட்விட்டரில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு 3 மாதங்கள் நீட்டிப்பு

அட்டர்னி ஜெனரலாக (மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்) கே. கே. வேணுகோபால் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் படி, இவரது பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சில தனிப்பட்ட காரணங்களினால், அவர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியாததைத் தொடர்ந்து அடுத்த 3 மாதங்களுக்கு மட்டும் பணியைத் தொடர இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்