Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Current Affairs 2022 in Tamil: ஜூலை 06, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்

Gowthami Subramani July 06, 2022 & 16:30 [IST]
Current Affairs 2022 in Tamil: ஜூலை 06, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்Representative Image.

Current Affairs 2022 in Tamil: ஜூலை 06 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்விற்கு கேட்கப்படும் வினாக்களைப் பற்றி தெரிந்து கொள்ள நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்கள்.

தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி உணவு மானிய நிலுவை

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில் தில்லியில் நடைபெற்ற உணவு-ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை உலகளாவிய பொது விநியோக முறை (Universal Public Distribution System). ஆனால், மற்ற இடத்தில் இது Target and Public Distribution System என அழைக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சத்தான உணவுப் பொருள்கள் வழங்கும் நோக்கத்தோடு, சிறப்பு பொது விநியோகத் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு வாரத்துக்கு 5 நாள்களுக்கு முட்டை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்ட உணவு மானிய நிலுவைத் தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட அமலாக்கம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் 9 ஆவது இடத்தில் உள்ளது.

சுகாதார திட்ட நிலுவை நிதி

உணவு மானிய நிலுவைத் தொகையைப் போல, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மத்திய சுகாதாரத் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். அதன் படி, நிலுவையில் உள்ள 1,400 கோடி நிதிய உரிய பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி. குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

யூரியா உற்பத்தியில் 2025-ல் தன்னிறைவு

வரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைவைக் காணும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக விளங்கும் மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாய்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாட்டின் யூரியா உற்பத்தி 260 லட்சம் டன்னாக உள்ளது. மேலும், 90 லட்சம் டன் அளவிலான யூரியா, உள்ளூர் தேவையை ஈடுசெய்வதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த இறக்குமதியைக் குறைத்து வரும் முயற்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் படி, 2025-ல் இறக்குமதி என்பது இருக்காது. அதன் படி, யூரியா மற்றும் நானோ திரவ யூரியா உற்பத்தி ஆண்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வரும் 2025-ல் தன்னிறைவு அடைய வேண்டும்.

அக்னிபத் திட்டம்

அக்னிபத் திட்டத்தின் கீழ், கடற்படையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி

நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளும், நாட்டின் பிரதமராக 7 ஆண்டுகளும் ஆனது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், எழுத்தாளர் சுதா மூர்த்தி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் எழுதிய கட்டுரைகள் “மோடி அட்20:ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” என்ற பெயரில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லாத சூழலை உருவாக்குதல்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையின் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கும் அரசு, தனியார் துறையினருக்கு விருது அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த விருதைப் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பிரதான நுழைவு வாயிலில் கைப்பிடிகளுடன் கூடிய சாய்தளம் போதிய அளவில் இருக்க வேண்டும். வரவேற்பறை, தகவல் அளிக்கும் இடம் போன்ற முக்கியமான இடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.

ஆதார் விவரங்கள் – தேர்தல் ஆணையம் விடுத்த எச்சரிக்கை

பயனர்களின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஆதார் விவரங்களை கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்