Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி அறிவிப்பு!

KANIMOZHI Updated:
12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி அறிவிப்பு!Representative Image.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில்  தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

11 ம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் எனவும் இதர கட்டணம் 35 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும், சுயநிதி பள்ளிகள்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலாத மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

06.01.2023 மதியம் முதல் 20.01.2023 மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்