Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Current Affairs 2022 in Tamil: ஜூலை 08, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்

Gowthami Subramani July 08, 2022 & 16:30 [IST]
Current Affairs 2022 in Tamil: ஜூலை 08, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்Representative Image.

Current Affairs 2022 in Tamil: போட்டித்தேர்வுகளுக்கான தினசரி நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். இதில் ஜூலை மாதம் 8 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தொழில்துறை

தொழில்துறை தரவரிசைப்படி, தமிழ்நாடு 96.97% மதிப்பெண் பெற்று 3-ஆவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் 18-ஆவது நிலையையும், 2019- ஆம் ஆண்டில் 14-ஆவது நிலையையும் பெற்றிருந்தது.

பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலகம்

2022 ஆம் ஆண்டின் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலகத்துக்கான அதிகாரி லிசி டால்போட் பார்ரே.

நெகிழத் தடையைச் செயல்படுத்த இலவச தொலைபேசி எண்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான உதவி மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விவரங்களைப் பெறலாம்.

1800 425 6750 என்ற இலவச எண்ணில் ஜூலை 31 வரை காலை 09.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

ஓமைக்ரான் பி.ஏ.275

இந்தியாவில் ஓமைக்ரான் பிஏ.275 வகை கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது.

கோதுமை ஏற்றுமதி நாடுகள்

இந்தியாவின் முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடுகளாக இருப்பது ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகும்.

மேலும், கோதுமை ஏற்றுமதியில் மற்றொரு முக்கிய நாடாக விளங்குவது இந்தோனேஷியா ஆகும்.

வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம்

2022 ஆம் ஆண்டின் ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஜூலை 7, 2022 அன்று நடைபெற்றது.

ஜி20 கூட்டமைப்பு 2023 ஆம் ஆண்டில் இந்தியா தலைமை வகிக்க உள்ளது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேஸில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துர்கியே, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளன.

(குறிப்பு: துருக்கி நாடு துர்கியே என மாற்றப்பட்டுள்ளது.)

ஜி20 தூதராக அமிதாப் காந்த் நியமனம்

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்க உள்ளதால், இதற்கான தூதராக (ஷெர்பா) நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் போட்டி

2022 ஆம் ஆண்டின் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 16 பிரிவுகளில் களம் காண்பதற்காக 215 போட்டியாளர்கள் கொண்ட இந்திய அணி புறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்