Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Current Affairs Daily in Tamil: ஜூன் 23, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்

Gowthami Subramani June 23, 2022 & 17:00 [IST]
Current Affairs Daily in Tamil: ஜூன் 23, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்Representative Image.

Current Affairs Daily in Tamil: இன்றைக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி காண்போம். போட்டித் தேர்வுகளுக்கு இதில் கொடுக்கப்பட்ட குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 1,000 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இயற்கைப் பேரழிவான நிலநடுக்கம் காரணமாக 1,000 பேர் இறந்துள்ளனர்.

இறப்பு விகிதத்தைப் பொறுத்த வரை, பேரிடர்களால் ஏற்படக் கூடிய நிலநடுக்கம், வெள்ளம் போன்றவற்றால் உயிரிழந்தவர்களையும் குறிப்பதாகும்.

நூற்றாண்டு காணும் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்ல உறைவிட உயர்நிலைப்பள்ளி

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரால், 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாணவர் இல்லம் தாய், தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, உணவு, உடை, உறைவிடம், அளித்து சேவை செய்து வருகிறது.

தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த கல்வி பணியாற்றும் நிறுவனங்களில் ஒன்றான ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் தனது உறைவிட உயர்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

ராமகிருஷ்ண மிஷனின் முன்னோடி கல்வி நிறுவனமாக மாணவர் இல்லம் விலங்குகிறது.

மாணவர் இல்லத்தில் ராம கிருஷ்ண மிஷன் பாலிடெக்னி கல்லூரி ராமகிருஷ்ண நூற்றாண்டு தொடக்கப்பள்ளி ஆகியவையும் இயங்கி வருகின்றன.

நடமாடும் அறிவியல் ஆய்வகம்

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசுப்பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு நடமாடும் அறிவியல் ஆய்வகம் மூலம் இனி மாதந்தோறும் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் சோதனை

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நவீன ரத்த பரிசோதனையை, “டாட்டர் கேன்சர் ஜெனிடிக்ஸ்” நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த அப்போல்லோ மருத்துவமனை முன் வந்துள்ளது.

தொண்டைமானுக்கு நினைவு மண்டபம்

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னர் ராஜகோபால தொண்டைமான். அவர் தனது ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வந்தார்.

ஜனவரி 26-ல் பிரதமர் மோடி ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 26 ஆம் நாள் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இரு நாள்கள் அங்கு தங்கி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து 28 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஜி7 அமைப்புக்கு ஜெர்மனி தலைமை வகிக்கிறது. ஜெர்மனி பிரதமரான ஒலாஃப்ஷோல்ஸ் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டிற்குச் செல்கிறார். இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மேலும், அமெரிக்க அதிபரான ஜோ பைடன் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

உக்ரைன்- ரஷ்ய போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை. இது சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்தது. இதனையடுத்து, இந்தியாவுடன் நட்புறவை மேலும் வலுப்படுத்த அந்நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தியா தவிர, வேறு சில நாடுகளும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பினர்களாகப் பங்கேற்க உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்