Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

CUTE Registration Last Date: கியூட் தேர்வுக்கான விண்ணப்பம் நீட்டிப்பு…! எப்படி விண்ணப்பிப்பது?

Gowthami Subramani July 03, 2022 & 12:35 [IST]
CUTE Registration Last Date: கியூட் தேர்வுக்கான விண்ணப்பம் நீட்டிப்பு…! எப்படி விண்ணப்பிப்பது? Representative Image.

CUTE Registration Last Date: மத்திய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

முதுகலைப் பட்டப்படிப்புக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான பதிவு தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான CUET PG தேர்வில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான கடைசி நாள் ஜூலை 4 என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், NTA பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க கடைசி தேதியை நீட்டித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் படி, விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதிக்கு இரவு 05.00 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி cuet-pg@nta.ac.in

முக்கிய தேதிகள்

விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 10, 2022 (மாலை 05.00 மணி வரை)

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி தேதி: ஜூலை 11, 2022 (இரவு 11.50 மணி வரை)

விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் செய்வதற்கான கடைசி தேதி: ஜூலை 12, 2022 (இரவு 11.50 மணி வரை)

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் முதலில் CUET PG-2022 ஆம் ஆண்டிற்கான பதிவு இணைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பின், போர்ட்டலில் பதிவு செய்வதற்குத் தேவையான சான்றிதழ்களை உள்ளிட வேண்டும்.

பதிவு செய்தவுடன், அதற்கான Login மற்றும் Password முதலியவற்றைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

பின், விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். சான்றிதழ்கள் தேவையானால், அதில் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

CUET PG 2022-க்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின், பதிவு கட்டணம் கேட்கப்பட்டிருப்பின் பதிவு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

பிறகு, விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கி எதிர்கால பயன்பாட்டிற்கான பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதிவு செய்வதற்கு இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

CUET PG Application Form 2022 | CUET PG Last Date to Apply 2022 | CUET PG 2022 Syllabus | CUET PG 2022 Exam Date | CUET 2022 Registration Website | CUET PG Brochure 2022 | CUET PG 2022 University List | CUET 2022 Registration Last Date | How to Apply CUET PG Exam 2022 Application Form | How to Apply CUET PG Exam 2022 Online | How to Apply CUET PG Exam 2022 in Tamilnadu | How to Apply CUET PG Exam 2022 in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்