Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்களும் இங்கே… | How to Apply For UGC Net Exam

Gowthami Subramani Updated:
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்களும் இங்கே… | How to Apply For UGC Net ExamRepresentative Image.

பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், தேசிய தேர்வு முகமை நெட் தேர்வு வைக்கிறது. இதன் மூலம், இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியில் சேர முடியும்.

பொதுவாக, ஆண்டுதோறும் இருமுறை யுஜிசி அறிமுகப்படுத்திய இந்த நெட் தேர்வு நடத்தபப்டும். அதன் படி, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் படி, இதில் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரங்களையும் காண்போம்.

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்களும் இங்கே… | How to Apply For UGC Net ExamRepresentative Image

NET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் (How to Apply UGC NET Online?)

NET தேர்வுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அந்தப் பக்கத்தில் உள்ள Notification என்பதைக் க்ளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

குறிப்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அதன் படி, புதிய பயனராக இருப்பின், New Registration என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், முகவரி உள்ளிட்டவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதனுடன், பயனர்கள் Password-ஐ வைத்துக் கொள்ளலாம்.

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்களும் இங்கே… | How to Apply For UGC Net ExamRepresentative Image

இதன் பிறகு, Login என்பதைக் க்ளிக் செய்து, விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப எண் மற்றும் Password-ஐக் கொண்டு விண்ணப்பிக்க Login செய்ய வேண்டும்.

பிறகு, அந்தப் பக்கத்தில் UGC NET-க்கான விண்ணப்பப் படிவத்தின் மற்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். பின் அதில் கேட்கப்பட்டுள்ளவாறு, ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம், புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறகு, தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து Submit என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்களும் இங்கே… | How to Apply For UGC Net ExamRepresentative Image

விண்ணப்பக் கட்டணங்கள்

இந்த தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் பிரிவுகளுக்கு ஏற்ப யுஜிசி மூலம் அறிவிக்கப்படும்.

மேலே கூறப்பட்ட குறிப்புகளின் படி, விண்ணப்பதாரர்கள் யுஜிசி-ன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பாகவே, விண்ணப்பிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்