Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி! கூடுதலாக பணியிடங்கள் சேர்ப்பு.. முழுவிபரம்..

Nandhinipriya Ganeshan Updated:
TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி! கூடுதலாக பணியிடங்கள் சேர்ப்பு.. முழுவிபரம்..Representative Image.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. இதில் அரசுப் பணிகளுக்கான பணியிடங்கள் 7,301 மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள்  81 என மொத்தம் 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்து, சுமார் 15 லட்சம் பேர் எழுதினார்கள். 

இந்த தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியிடங்கள் எண்ணிக்கை 1,024 இருந்து 1176 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2023 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இவ்வாண்டு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்